சென்னை: சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் நேற்று சக்ஸஸ் மீட் நடைபெற்றது.
இதில், சிம்பு, கெளதம் மேனன் உள்ளிட்ட வெந்து தனிந்தது காடு படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
வெற்றி மேல் வெற்றி
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் சிம்பு, கடந்த சில வருடங்களாக நல்ல பிள்ளையாக மாறிவிட்டார். கிட்டத்தட்ட இருக்கும் இடம் தெரியாமல் இருந்த சிம்பு, கடந்தாண்டு வெளியான ‘மாநாடு’ திரைப்படம் கம்பேக் கொடுத்தார். வெங்கட் பிரபு டைரக்ஷனில் சிம்புவின் வெரைட்டியான நடிப்பில் வெளியான இந்தப் படம், வேற லெவலில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் தற்போது வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படமும், பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்து வருகிறது. முத்து வீரனாக வெற்றி வாகை சூடியுள்ளார் சிம்பு.
வெந்து தணிந்தது காடு சக்ஸஸ் மீட்
வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை அடுத்து நேற்று சென்னையில் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. இதில், சிம்பு, நீரஜ் மாதவ், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சிம்பு முதலில் அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும், “ரெகுலரான கமர்சியல் படமாக இல்லாமல் உருவான வெந்து தணிந்தது காடு சக்ஸஸ் ஆகுமா என சந்தேகம் இருந்தது. ஆனால், இப்போது நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கு” எனக் கூறினார்.
ஷூட்டிங் ஸ்பாட்ல வச்சு செஞ்சிட்டாங்க
தொடர்ந்து பேசிய சிம்பு, “நிறைய வலிகளை கடந்து இந்தப் படத்தில் நடித்துள்ளேன், இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. கெளதமுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் ஒர்க் பண்ணிருந்தாலும், இந்தப் படத்தில் வச்சு செஞ்சுட்டார். அவ்ளோ கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன், அதெல்லாம் வெந்து தணிந்தது காடு படத்தின் மேக்கிங் வீடியோவில் பார்க்கலாம். எந்தவித கமர்சியல் எலிமெண்ட்ஸும் இல்லாமல் இப்படி ஒரு படம் பண்றது ரொம்பவே கஷ்டமானது. அதுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் ரொம்பவே ஹெல்ப் பண்ணார்” எனத் தெரிவித்தார்.
இரண்டாம் பாகம் தான் ரியல் கேங்ஸ்டர்
அதேபோல், ஏஆர் ரஹ்மானின் இசை பற்றியும் சிம்பு பேசினார். “மறக்குமா நெஞ்சமே பாடல் ஹிட் என்பது முதலிலேயே தெரிந்துவிட்டது. ஆனால், மல்லிப்பூ சாங் சூப்பர் ஹிட்டடிக்கும் என நான் அப்பவே சொன்னேன். அதுதான் இப்போது நடந்துள்ளது” என்றார். மேலும், இப்போது வெளியான வெந்து தணிந்தது காடு முதல் பாகம், கேங்ஸ்டர் படம் இல்லை. இது முத்து எப்படி கேங்ஸ்டராகிறான் என்ற பயணம் தான், இரண்டாம் பாகத்தில் தான் ரியல் கேங்ஸ்டர் கதை இருக்கு. அதை கெளதம் தான் சீக்கிரம் சொல்லணும்” என சிம்பு பேசினார். அவரது பேச்சை வைத்து பார்க்கும் போது வெந்து தணிந்தது காடு செகண்ட் பார்ட், ஆக்சனில் இன்னும் தூள் பறத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.