கொல்கத்தா: துரந்த் கால்பந்து கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் முன்னாள் பாஜக நிர்வாகியும், மேற்கு வங்க கவர்னருமான இல. கணேசனின் வீடியோ ஒன்று இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.
துரந்த் கால்பந்து கோப்பை தொடர் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த தொடரில் இதுவரை பெங்களூர் கோப்பையை வென்றது இல்லை.
இந்த நிலையில் இந்த வருட தொடரில் பெங்களூர் பைனல்ஸ் வந்தது. வலிமையான மும்பை அணியை பெங்களூர் அணி நேற்று இறுதி போட்டியில் எதிர்கொண்டது.
பெங்களூர்
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இந்த இறுதி போட்டி நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பெங்களூர் அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. சிவ சக்தி பெங்களூர் அணிக்காக 10வது நிமிடத்திலேயே முதல் கோல் எடுத்தார். அதன்பின் ஆலன் கோஸ்டா 61வது நிமிடத்தில் இரண்டாவது கோல் போட்டார். இதனால் ஆட்டம் பெங்களூர் பக்கம் தொடக்கத்திலேயே சென்றது.
மும்பை தோல்வி
சுனில் அடித்த கார்னர் கிக்கில் ஆலன் கோஸ்டா 61வது நிமிடத்தில் இரண்டாவது கோல் போட்டார். இடையில் மும்பை அணி ஒரு கோல் அடித்தாலும், இரண்டாவது கோல் அடித்து அந்த அணியால் சமன் செய்ய முடியவில்லை. பெங்களூர் அணியின் டிபன்ஸ் நேற்று மிக சிறப்பாக இருந்ததால் மும்பை அணியால் வெற்றி பெற முடியவில்லை. இதன் மூலம் துரந்த் கால்பந்து கோப்பை தொடர் ஆட்டத்தில் முதல் முறையாக பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கால்பந்து தொடர்
துரந்த் கால்பந்து கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் முன்னாள் பாஜக நிர்வாகியும், மேற்கு வங்க கவர்னருமான இல. கணேசனின் வீடியோ ஒன்று இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது. இந்த தொடரில் பெங்களூர் வென்ற பின் அதற்கான கோப்பையை மேற்கு வங்க கால்பந்து சங்க நிர்வாகிகள் வழங்கினார்கள். கொல்கத்தாவில் போட்டி நடைபெற்றதால் இதில் ஆளுநர் இல. கணேசன் இடம்பெற்று இருந்தார்.
இல கணேசன்
அவர் நேற்று பரிசு வழங்கும் போது சுனில் சேத்ரியை தள்ளி விட்டார். போட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்காக அவர் சுனிலை தள்ளி நிற்கும்படி கூறினார். அவரின் உடலில் கையை வைத்து அழுத்தி தள்ளிப்போ என்பது போல அமுக்கி தள்ளினார். சுனில் இதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் தள்ளி நின்றார். இந்த வீடிய இணையத்தில் வெளியாகி உள்ளது.
வீடியோ சர்ச்சை
இதுதான் இணையம் முழுக்க பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் பலர் இதை பகிர்ந்து கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். இல கணேசன்தான் அந்த போட்டியில் ஆடியதா? அவர்தான் பெங்களூர் அணியை வெற்றிபெற வைத்தாரா? என்று கேட்டு கிண்டல் செய்து வருகின்றனர். அதோடு கால்பந்து வீரர்கள் இவர்கள் மதிக்கும் லட்சணம் இதுதானா என்றும் கேட்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.