லடாக்கில் 4.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்| Dinamalar

லடாக்: லடாக்கில் இரண்டாவது நாளாக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘லடாக்கின் லேவில் நேற்றிரவு (செப்.,18) 8:36 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

அதேபோல், இன்று காலை 9:30 மணியளவில் கார்கிலில் 4.3 ரிக்டர் அளபிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும், சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.