இந்தியாவில் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் பண்டிகள் காலத்தை முன்னிட்டு Big Billion Days மற்றும் Great Indian Festival விற்பனையை தொடங்கியுள்ளது.
இந்த விற்பனையில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்கின்றது. இதில் தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் மக்கள் அதிகம் வாங்கும் 30 ஆயிரம் ரூபாய் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்களில் சிறந்த டீல் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.
30 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படும் சிறந்த போன்களின் விவரத்தை கீழ்கண்ட பட்டியலில் காணலாம்.
1.Nothing Phone (1)
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த Nothing Phone (1) ஆரம்ப விலையாக 28,999 ஆயிரம் ரூபாயில் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் புதுவிதமான Glyph Interface, Qualcomm Snapdragon 778G+ octa-core processor, 6.55-inch full HD+ display வசதி மற்றும் 4,500mAh பேட்டரி உள்ளது.
2.Google Pixel 6a
கூகுள் நிறுவனத்தின் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் 27,699 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கூகுள் நிறுவனத்தின் புதிய Tensor சிப் கொண்டுள்ளது. இதில் 128 GB ஸ்டோரேஜ் வசதி, 8MP முன்பாக கேமரா, 12 MP பின்பக்க கேமரா வசதி உள்ளது.
ஒரிஜினல் கூகுள் போன் மற்றும் மென்பொருள் பயன்படுத்த வேண்டும் என்று ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் Google Pixel 6a போனை வாங்கலாம்.
3.Oppo Reno 8 5G
இதன் விலை 26,999 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் MediaTek Dimensity 1300 processor, 32 MP முன்பக்க கேமரா, 80 watt Super VOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4,500mAh பேட்டரி வசதி, 6.43-inch Full HD ஸ்க்ரீன் கொண்டுள்ளது.
4.Motorola Edge 30 5G
மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த 5G போன் டிஸ்கவுண்ட் செய்யப்பட்டு 22,749 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.55 -inch full HD+ AMOLED display, 144HZ Refresh rate, Qualcomm Snapdragon 778G Plus processor, பின்பக்க 50MP+50MP+2MP ட்ரிபிள் கேமரா வசதி, 32MP முன்பக்க கேமரா போன்ற வசதிகள் உள்ளன.
5.Realme GT 2
இந்த ஸ்மார்ட்போன் விலை 26,999 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் Qualcomm Snapdragon 888 processor, 5000 mAh பேட்டரி, 6.62 இன்ச் ஸ்க்ரீன், 16MP முன்பக்க கேமரா வசதி கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்