2022-ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யூனிகார்ன் அந்தஸ்த்தை பெற்றன.
ஆகஸ்ட் மாதம் மட்டும் 20 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யூனிகார்ன் அந்தஸ்த்தை பெற்றுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 341 பில்லியன் டாலர்.
இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எல்லாம் கோடி கணக்கில் முதல்லீடுகளை ஈர்ப்பது, அதனை தண்ணீர் போல செலவளிப்பது என இருக்கும் நிலையில், அவை கோடி கணக்கில் நட்டம் தான் அடைந்து வருகின்றன. இதுவரையில் ஒரு மாதம் கூட லாபம் என்பதையே பார்த்ததில்லை என தரவுகள் கூறுகின்றன.
வறண்டு போன சந்தை.. ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கைப்பற்றும் VC-க்கள்.. என்ன நடக்கிறது..?!
பைஜூஸ்
இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்டப் நிறுவனமாக கல்வி ஆப் பைஜூஸ் உள்ளது. குறைந்த காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியை ஸ்பான்சர் செய்யும் அளவுக்கு வளர்ந்தது. இந்த நிறுவனம் 4,588 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வருகிறது.
ஓயோ ரூம்ஸ்
இந்தியாவின் மிகப் பெரிய சங்கிலி தொடர் ஹோட்டல் நிறுவனமன ஓயோ ரூம்ஸ், உலகம் முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவு செய்து வந்தாலும் 3,944 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வருகின்றன.
உதான்
இந்தியாவின் மிகப் பெரிய பி2பி ஆன்லைன் ஒட்டுமொத்த விற்பனை நிறுவனமான உதான், 2,482 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வருகிறது.
ஃபிளிப்கார்ட்
இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் சில ஆண்டுகளுக்கு முன்பு வால்மார்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. ஃபிளிப்கார்ட் நிறுவனம் பெங்களூருவில் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் ஒரு முறை கூட லாபம் என்பதையே பார்த்ததில்லை. அண்மையில் 2446 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளது.
எருடிடஸ்
எருடிடஸ் குழுவானது, எருடிடஸ் எக்சிகியூட்டிவ் எஜிகேஷன் மற்றும் அதன் ஆன்லைன் பிரிவு எமரிட்டஸை உள்ளடக்கியது. உலகத் தரம் வாய்ந்த வணிகம் மற்றும் தொழில்முறைக் கல்வியை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கொண்டு வர அமெரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள உயர்மட்டப் பல்கலைக்கழகங்களுடன் கூட்டாளியாக இந்த நிறுவனம் உள்ளது. 1,934 கோடி ரூபாய் நட்டத்தில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
போன் பே
ஃபிளிப்கார்ட்டுக்கு கீழ் செயல்பட்டு வரும் ஒரு வாலெட் மற்றும் யூபிஐ செயலி நிறுவனம் போன் பே. இந்த நிறுவனம் 1,728 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வருகிறது.
பேடிஎம்
வாலெட் சேவை நிறுவனமான பேடிஎம் இப்போது இ-காமர்ஸ் போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது. ஒரு காலத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்று இருந்த பேடிஎம் பெரும் நட்டத்தில் உள்ளது. அதன் முக்கிய முதலீட்டாளர்கள் அதனை விட்டு வெளியேறியுள்ளனர். சமீபத்தில் பேடிஎம் நிறுவனம் 1,710 கோடி ரூபாய் நட்டம் அடைந்ததாக அறிவித்தது.
ஸ்விகி
ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விகி, 1,617 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வருகிறது.
அன் அக்காடெமி
ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான அன் அக்காடெமி 1,537 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளது. கொரோனா காலத்தில் பெரும் முதலீடுகளை குவித்து பயனர்களை ஈர்த்த கல்வி செயலி நிறுவனங்கள் இப்போது பெரும் நட்டத்தில் உள்ளன.
ஃப்ரெஷ் வொர்க்ஸ்
ஜோஹோ போட்டி நிறுவனமான ஃப்ரெஷ் வொர்க்ஸ் மின்னஞ்சல், இணையதளம், மென்பொருள் போன்ற சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனமும் 1,499 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளது.
ஐபிஓ
இங்கு மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் பல விரைவில் தங்களது பங்குகளை ஐபிஓ மூலம் வெளியிடுகின்றன. இப்படி நட்டத்தில் இருக்கும் நிறுவனங்கள் ஐபிஓ வில் தங்களது பங்குகளை வெளியிடும் போது அதில் முதலீடு செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் பேடிஎம், ஜொமாட்டோ உள்ளிட்டவை ஆகும். முதலீடுகளை ஈர்த்த பிறகு அதில் முதலீடு செய்த நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியுள்ளன.
வேலை இழப்புகள்
முதலீடுகளை ஈர்க்க இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்கள் பெற வேண்டி உள்ளது. அதற்கு தங்களிடம் உள்ள பணத்தையும் முதலீடுகளையும் ஆஃபர்களாக வாரி வழங்குகின்றன. சில நிறுவனங்கள் விளம்பரத்துக்காக அதிகளவில் செலவழிக்கின்றன. ஆனால் அவர்கள் செலவு செய்ததற்கு ஏற்ற வர்த்தகம் இல்லாத போது நட்டம் அடைகின்றன. மேலும் இதானல் சிறிய அளவில் தொழில் செய்பவர்களும் பெரும் அளவில் பாதிப்படைகின்றனர். சிலர் நண்மைக்காக பலர் நட்ட்மே அடைகின்றனர். பல ஊழியர்களை குறைந்த காலத்தில் அதிக சம்பளத்துக்கு வேலையில் சேர்த்துக்கொள்வதும் பின்னர் வேலையை விட்டு விரட்டுவதும் அரங்கேறி வருகிறது.
யூனிகார்ன் நிறுவனங்கள் என்றால் என்ன?
1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக தங்களது நிறுவனம் மதிப்பை வைத்துள்ள நிறுவனங்கள் யூனிகார்ன் என அழைக்கப்படுகின்றன. சென்னை, மும்பை, பூனே, ஹைதராபாத் நகரங்களில் மொத்தமாக 32 யூனிகார்ன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. பெங்களுருவில் அதிகபட்சமாக 38 யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. டெல்லியில் 30 யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன.
India’s Top 10 Loss Making Startups
India’s Top 10 Loss Making Startups | நட்டத்தில் இயங்கி வரும் டாப் 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. முதலீடுகள் என்ன தான் ஆகின்றன?