போபால்: இளம்மனைவியை, குடிகார கணவன் செய்த சித்ரவதையை கேட்டு மத்திய பிரதேச மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். என்ன நடந்தது?
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.. அதிலும் வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறி கொண்டே இருக்கிறது..
இதில் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளதை மறுக்க முடியாது… இதற்கு அடுத்தபடியாக உள்ளது மத்திய பிரதேசம்.. இப்படி வடமாநில பெண்களின் நிலைமை நாளுக்குநாள் பரிதாபத்தை கூட்டிவருகிறது..
பெரிய டவுட்
கணவன்மார்களிடம் சிக்கி சீரழியும் அந்த பெண்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது.. சில மாதங்களுக்கு முன்பு, இதே மத்திய பிரதேசத்தில் ஒரு கொடுமை நடந்தது.. சிங்க்ராலி மாவட்டத்தில் மடா என்ற கிராமம் உள்ளது.. இங்கு 55 வயதான நபர் வசித்து வருகிறார்.. இவரது மனைவிக்கு 35 வயதாகிறது.. மனைவியின் நடத்தை மீது அந்த கணவனுக்கு நிறைய சந்தேகம் இருந்து வந்துள்ளது..
ஊசி + நூல்
அதே ஊரில் உள்ள ஒருவரோடு மனைவிக்கு கள்ள உறவு இருப்பதாக கணவனுக்கு சந்தேகம் மண்டைக்கு ஏறி, நிறைய தகராறு செய்து வந்துள்ளார்.. இதையே சாக்காக வைத்து, மனைவியை அடிக்கடி அவரை அடித்து துன்புறுத்திய்ம் வந்துள்ளார்… தான் ஒரு தவறும் செய்யவில்லை என்று அந்த பெண் தினந்தோறும் கதறியும், கணவன் கேட்கவில்லை. அப்படித்தான் சம்பவத்தன்றும் தகராறு வெடித்துள்ளது.. இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கயிறுகளால் இறுக கட்டிப்போட்டார்.. பிறகு ஒரு ஊசியை எடுத்து வந்து, மனைவியின் அந்தரங்க உறுப்பு பகுதியை தைத்து விட்டார்..
ஸார்.. வேண்டாம்
அதற்கு பிறகும் ஆவேசம் குறையாமல், மனைவியை ஒரு ரூமில் போட்டு அடைத்து கொடுமைப்படுத்தினார்… அந்த பெண் வேறுவழியில்லாமல் அங்கிருந்து தப்பி வந்து அங்குள்ள ஸ்டேஷனில் கணவன் மீது புகார் கொடுத்தார்.. புகாரையும் தந்துவிட்டு, போலீஸாரிடம் என்ன சொன்னார் தெரியுமா? “என் புருஷனை கைது செய்ய வேண்டாம், நடவடிக்கை எதுவும் எடுத்துடாதீங்க, வேணும்னா நல்லா திட்டுங்க சார்” என்றாராம்.. ஆபத்தான நிலைமையிலும், ஒரு பெண் கணவனுக்காக இப்படி பரிந்து பேசியதை பார்த்து போலீசார் திகைத்தனர்..
மர்ம உறுப்பு
பிறகு, அவரை மருத்துவக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துவிட்டு, தலைமறைவான கணவனை தேடினர்.. அதற்கு பிறகு அந்த கேஸ் என்ன ஆனது என்று தெரியவில்ல.. இப்போது இன்னொரு சம்பவம் இதே போன்று, இதே மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. ஜியோ பூர் மாவட்டத்தில் சென் ஹாஸ்டல் என்கிற பகுதியில் வசித்து வருகின்றனர் இந்த தம்பதி.. கணவர் பெயர் சென். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது… கல்யாணமாகி ஒருசில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.. அதற்கு பிறகுதான், கணவனிடன் சுயரூபம் தெரிய ஆரம்பித்துள்ளது..
கயிறு கட்டினார்
மதுபோதைக்கு ஆளாகி வந்துள்ளார் கணவர்.. தினம் தினம் குடித்துவிட்டு மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.. கஞ்சாவுக்கும் அடிமையாகி உள்ளார்.. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடும், தகராறும் ஏற்பட்டு வந்திருக்கிறது. எங்கேயும் வேலை வெட்டிக்கு போவது கிடையாதாம்.. நாள் முழுவதும் போதையிலேயே இருந்துவிட்டு, இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து சண்டை போடுவதுதான் இந்த கணவனுக்கு வேலையாம்.. அப்படித்தான், சில தினங்களுக்கு முன்பு, காலையிலேயே தண்ணி அடிக்க கிளம்பி உள்ளார்.. குடிக்க பணம் வேண்டும் என்றும் மனைவியிடம் கேட்டுள்ளார்..
அந்தரங்கம்
இதனால் உச்சக்கட்ட வெறுப்புக்கு சென்ற மனைவி, தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி மறுத்து, தட்டிக் கேட்டுள்ளார்.. தன்னை எதிர்த்து மனைவி பேசுவதா? என்று ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கடுமையாக அடித்து உதைத்திருக்கிறார். இனிமேல் தன்னை கேள்வி எதுவும் கேட்ககூடாது என்றால், சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.. அதற்காக மனைவியை கடுமையாக அடித்து உதைத்து, ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கினார்.. பிறகு, மனைவியின் கை, கால்களை கயிறுகளால் இறுக்கி கட்டிப்போட்டார்.. பிறகு, வீட்டில் இருந்த பெவிக்குவிக் எடுத்து வந்து மனைவியின் அந்தரங்கப் பகுதியில் ஊற்றி கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறார். இதில் மனைவி வலி தாங்காமல் அலறி கத்தி உள்ளார்..
சீரியஸ்
அந்த அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் அதிர்ந்து போய், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்… அவரது வாக்குமூலத்தை பெற்று, வழக்கை பதிவு செய்துள்ளனர்.. ஆனால், அதற்குள் அந்த கணவர் தலைமறைவாகி விட்டாராம்.. அவரை தேடி கொண்டிருக்கிறார்கள்.. அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. ஆனாலும், சீரியஸாக இருக்கிறாராம்..!
வடமாநிலம்
பொதுவாக கல்வியறிவு பெற்ற தேசம், ஒரு முன்னேறிய தேசமாக கருதப்படும்.. எந்த ஒரு மனிதனுக்கும் சிந்திக்கும் திறனும், கேள்வி கேட்கும் உரிமையும் இருந்தாலே போதும்.. நிச்சயம் அவன் சார்ந்து வாழும் சமுதாயமும் எழுச்சி பெற்றுவிடும்..! ஆனால், வடமாநிலங்களில் அப்படி ஒரு நிலைமை இதுவரை இல்லை.. பெரும்பாலான மாநிலங்களின் கிராமங்களில் கல்வி மறுக்கப்படுகிறது.. மறக்கடிக்கப்படுகிறது.. மறைக்கப்படுகிறது.. இந்த விஷயத்தை, இனியாகிலும் சீரியஸாக நாம் அணுக வேண்டி உள்ளது..!