சென்னை
:
தற்கொலை
செய்து
கொண்ட
நடிகை
தீபா,
கடந்த
சில
மாதங்களாகவே
விரக்தியான
மனநிலையில்
இருந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில்
மனவேதனையுடன்
வீடியோவை
பகிர்ந்துள்ளார்.
விருகம்பாக்கத்தில்
துணை
நடிகை
தீபா
என்ற
பவுலின்
வீட்டில்
தூக்குப்போட்டு
தற்கொலை
செய்து
கொண்டுள்ளார்.
அவருக்கு
வயது
29.
இந்த
சம்பவம்
குறித்து
தகவலின்
பேரில்
சம்பவ
இடத்திற்க்கு
வந்த
போலீசார்
உடலை
கைப்பற்றி
பிரேத
பரிசோதனைக்கு
மருத்துவமனைக்கு
அனுப்பிவைத்து
விசாரணை
நடத்தி
வருகின்றனர்.
நடிகை
தீபா
நடிகர்
நாசர்
நடித்த
வாய்தா
படத்தில்
கதாநாயகியாக
நடித்தவர்
தீபா
என்கிற
ஜெஸிகா
பவுலின்.
விஷாலின்
துப்பறிவாளன்
படத்திலும்
ஒரு
சிறுகதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்.
29
வயதான
தீபா,
தனது
வீட்டில்
துப்பட்டாவால்
தூக்கு
போட்டு
தற்கொலை
செய்து
கொண்டார்.
இந்த
சம்பவம்
குறித்து
போலீசார்
வழக்குப்பதிவு
செய்து
விசாரணை
நடத்தி
வருகிறார்கள்.
காதலன்
யார்?
தற்கொலை
தொடர்பாக
போலீசார்
வழக்கு
பதிவு
செய்து
விசாரனை
நடத்திய
போது,
தீபா
தற்கொலைக்கு
முன்பு
கடிதம்
எழுதி
வைத்திருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த
கடிதத்தில்,
உயிருக்கு
உயிராக
தாம்
ஒருவரை
காதலித்ததாகவும்,
அந்த
காதல்
நிறைவேறாததால்
உலகத்தைவிட்டு
செல்வதாகவும்,இந்த
தற்கொலைக்கு
யாரும்
காரணம்
இல்லை
என்றும்
அவர்
கூறியுள்ளார்.
இந்த
கடிதத்தை
கைப்பற்றிய
போலீசார்,
அந்த
காதலன்
யார்
என
தீவிரமாக
விசாரணை
நடத்தி
வருகின்றனர்.
நண்பரிடம்
விசாரணை
ஆந்திராவில்
இருக்கும்
தீபாவின்
சகோதரர்
ரமேஷிற்கு,
தீபாவின்
ஆண்
நண்பர்
பிரபாகரன்,
தீபா
தற்கொலை
செய்து
கொண்ட
தகவலை
செல்போனில்
தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல்,
நீண்ட
நேரமாக
கதவு
திறக்கப்படாததால்,
பிரபாகரன்
தான்
கதவை
உடைத்துக்கொண்டு
உள்ளே
சென்று
பார்த்துள்ளார்.
இதனால்,
போலீசார்
அவரிடமும்
விசாரணை
நடத்தி
வருகின்றனர்.
மரணத்தில்
சந்தேகம்
மேலும்,
தீபாவின்
சகோதரர்
ரமேஷ்,
தனது
தங்கை
நான்கு
செல்போன்
வைத்திருந்ததாகவும்,
அதில்
ஐபோனை
மட்டும்
காணவில்லை
எனவும்,
வீட்டில்
பொருட்கள்
சந்தேகத்திற்கு
இடமான
வகையில்
சிதறி
கிடந்ததால்,
தங்கை
தீபாவின்
மரணத்தில்
சந்தேகம்
இருப்பதாக
போலீசில்
தெரிவித்துள்ளார்.
தீபாவின்
சகோதரர்
எழுப்பி
உள்ள
சந்தேகம்
குறித்து
போலீசார்
விசாரணை
நடத்தி
வருகின்றனர்.
மனசுல
நிறைய
கவலை
இருக்கு
இந்நிலையில்,இணையத்தில்
ஆக்டிவாக
இருந்த
தீபா,
மனசுல
நிறைய
கவலை
இருக்கு,
அதை
கேட்கத்
தான்
யாருமே
இல்லை
என்று
இன்ஸ்டாகிராம்
வீடியோவில்
புலம்பி
உள்ளார்.
கடந்த
சில
மாதங்களாகவே
தீபா
மன
அழுத்தத்தில்
இருந்துள்ளார்
என்பது
அந்த
வீடியோவில்
தெளிவாக
தெரிகிறது.
இதுபோன்ற
பல
அழுத்தமோ,
தற்கொலை
எண்ணமோ
வந்தால்,
அதிலிருந்து
விடுபட
நெருங்கிய
நண்பர்களிடமோ,
ஆலோசனை
மையத்திலோ
மனம்விட்டு
பேசி
இருக்கலாமே
என்று
இணையவாசிகளும்
அவருக்கு
ஆழ்ந்த
இரங்கலை
தெரிவித்து
வருகின்றனர்.