டெல்லி அமைச்சர் சத்தியேந்தர் ஜெயினுக்கு எதிரான வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்தது டெல்லி ரோஷ் அவன்யூ நீதிமன்றம்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையினரால் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி டெல்லியின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்தியந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு தற்பொழுது வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இந்த வழக்கின் விசாரணையானது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஜாமீன் கோரி சத்தியந்திர ஜெயின் தொடர்ந்த மனு மீதான விசாரணையும் இதே நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்குகள் அனைத்தையும் வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி அமலாக்கத்துறை சார்பாக தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த ரோஸ் அவன்யூ நீதிமன்றம் மனு மீது பதிலளிக்குமாறு சத்தியேந்திர ஜெயின் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது அத்துடன் அனைத்து வழக்கு விசாரணைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டது.
இதையும் படிக்க: `ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவும்’- டெல்லி காவல்துறை சம்மன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM