நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான எஸ்எம்எஸ் கட்டணங்களைத் தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறியுள்ளது.
USSD (கட்டமைக்கப்படாத துணை சேவை தரவு) சேவைகளைப் பயன்படுத்தி இனி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.
இது பியூச்சர் போன்கள் வைத்துள்ளவர்களுக்கு ஜாக்பாட்..
இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்கு SBI பெயரில் வந்திருக்கா.. நம்பாதீங்க.. உஷாரா இருங்க!
பியூச்சர் போன்கள்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்யப் பல வழிகள் இருக்கும் நிலையில், பியூச்சர் போன்களை வைத்திருக்கும் பெரிய மக்கள் தொகைக்குப் பலன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் USSD முறையிலான பேமெண்ட் சேவை.
எஸ்எம்எஸ் கட்டணங்கள்
மொபைல் பணப் பரிமாற்றங்களில் எஸ்எம்எஸ் கட்டணங்கள் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன! பயனர்கள் இப்போது எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் எளிதாகப் பரிவர்த்தனை செய்யலாம். குறிப்பாக பியூச்சர் போன் பயனர்கள் *99# ஐ டயல் செய்து, வங்கிச் சேவைகளை முற்றிலும் இலவசமாகப் பெறுங்கள் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
USSD சேவை
USSD சேவையின் மூலம் பணம் அனுப்புதல், பணம் கோருதல், கணக்கு இருப்பைச் சரிபார்த்தல், மினி பேலென்ஸ் அறிக்கையைப் பெறுதல் மற்றும் UPI பின்னை மாற்றுதல் போன்ற அடிப்படை சேவைகளை ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் பெற முடியும்.
பியூச்சர் போன்
இந்த நிலையில் USSD சேவைகளைப் பயன்படுத்தி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் இப்போது பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று SBI தெரிவித்துள்ளது பியூச்சர் போன் வைத்துள்ளவர்களிடம் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது.
SMS வசதி
USSD என்பது ஒரு தொழில்நுட்ப தளமாகும், இதன் மூலம் பேசிக் மொபைல் போனில் GSM நெட்வொர்க் மூலம் தகவல்களை அனுப்ப முடியும். இது அனைத்து மொபைல் போன்களிலும் SMS வசதியுடன் கிடைக்கும் என்பதால் அதை அடிப்படையாக வைத்து டிஜிட்டல் சேவை தளம் உருவாக்கப்பட்டது.
SBI Waives Off SMS Charges On Mobile Fund Transfers using USSD services
State Bank of India Waives Off SMS Charges On Mobile Fund Transfers using USSD services