சென்னை: வெந்து தணிந்தது காடு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கவுதம் வாசுதேவ மேனன், சிம்பு இருவரும் கலந்துக்கொண்டு பேசினர்.
தான் ரசிகர்களை தூங்கி எழுந்து படம் பார்க்க வரச்சொன்னதற்கு காரணம் என்ன என்பதை கவுதம் மேனன் விளக்கினார்.
சிம்பு இரண்டாம் பாகம் பற்றி இயக்குநரை அமரவைத்துக்கொண்டே ரகசியத்தை போட்டு உடைத்தார்.
மேனன், சிம்பு, ரஹ்மான் காம்போ வெற்றியா?
வெந்து தணிந்தது காடு திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் சிறப்பான விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்பு உடல் மெலிந்து 21 வயது இளைஞனாக நடித்திருப்பார். இந்த படம் பெருத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. இந்த படத்தின் இசை ஏ.ஆர்.ரஹ்மான். கௌதம் மேனன், சிம்பு கூட்டணி என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றி காரணமாகவும் இந்த எதிர்பார்ப்பு இருந்தது.
தூங்கி எழுந்து வரச்சொன்னதற்கு விளக்கம் சொன்ன மேனன்
இந்நிலையில் இந்த படம் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. நேற்று இதன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இயக்குனர் கௌதம் மேனன் பேசும்பொழுது படம் குறித்து சில விஷயங்களை கூறினார். தனது படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கி விட்டு வர வேண்டும் என்று சொன்னதை சிலர் கிண்டல் அடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். அதற்கு இயக்குனர் கவுதம் மேனன் இந்த மேடையில் பதில் சொன்னார். பின்னர் பேசுவதற்கு மைக்கை பிடித்த சிம்பு படத்தின் டெக்னீசியன் பற்றி புகழ்ந்து பேசினார்.
இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் போட்டு உடைத்த சிம்பு
படத்தின் இரண்டாம் பாகம் பற்றியும் முதல் பாகம் பற்றியும் பேசினார். அப்பொழுது அவர் குறிப்பிட்டது ஒன்று படத்தில் இரண்டாம் பாகத்தில் தான் கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட காட்சிகள் வருகின்றது. முதல் பாகம் என்பது ஒருவர் எப்படி கேங்கஸ்டராக மாறுகிறார் என்பது பற்றி தான். இரண்டாம் பாகத்தில் தான் கேங்கஸ்டர் பற்றிய காட்சிகள் வருகின்றது என்றார். “படத்தில் பல காட்சிகளில் கேமராமேன் சித்தார்த் அருமையாக எடுத்திருந்தார். ஒரு காட்சியை எடுக்கும் பொழுது லைட் இல்லை சாதாரணமாக நின்று பேசிக் கொண்டிருந்தோம்.
கேமரா மேனை வியந்து பாராட்டிய சிம்பு
அப்பொழுது கேமராமேன் சார் ஷாட் ரெடி என்று சொன்னார். சரிங்க என்றேன் பிறகு மறுபடியும் ஷாட் ரெடி என்றார். இல்லங்க லைட் போட்டுட்டா நாங்க பண்ண ஆரம்பிச்சிருவோம் என்று சொன்னேன். சார் இதுதான் லைட்டிங்கு என்று சொன்னார் கேமராமேன், லைட்டிங் இதுதானா இந்த காட்சி படத்துல வருமா? என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் படத்தில் பார்க்கும்போது அந்த காட்சி அருமையாக வந்திருந்தது. அந்த அளவிற்கு கேமரா டெக்னீஷியன்ஸ் கேமரா டோன்களை இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு நான் ரொம்ப நன்றி சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
உருவக்கேலி செய்யாதீர்கள் சிம்பு வேதனை
“இந்த மாதிரி விஷயங்களை நான் சொல்லும்போது ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாம் படம் முடிந்தவுடன் நான் சொல்கிறேன். அதனால் சிம்பு என்னை படத்தில் இப்படி காட்டச் சொன்னார், அப்படி காட்ட சொன்னார், இதை செய்ய சொன்னார் என்று யாரும் இப்பொழுது குற்றம் சட்டம் முடியாது” என்று சொல்லி சிரித்தார் பின்னர் பேசிய அவர் “இந்த படம் நன்றாக வந்திருக்கிறது வெற்றி பெற்று இருக்கிறது இந்த நேரத்தில் என்னை பற்றி உருவத்தைப்பற்றி உங்களால் எழுத முடியவில்லை” என்று சொன்னவர் பின்னர் திடீரென்று சுதாரித்துக் கொண்டு நான் உங்களால் என்று சொன்னது இங்குள்ளவர்களை அல்ல இதுபோன்று எழுதுகின்றவர்களால் முடியவில்லை. அப்படி ஒரு சிலர் இருக்கிறார்கள் அவர்களை சொன்னேன் என்று திருத்தினார்.
சர்ச்சையை கிளப்பிய புளூசட்டை மாறன்
“அவர்களால் இந்த படத்தில் என் உருவத்தைப் பற்றி எழுத முடியவில்லை ஏனென்றால் உருவக்கேலி என்பது ஒரு மோசமான விஷயம் அதை நான் தாங்கிக் கொள்வேன், பலரால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. ஆகவே தயவு செய்து எங்களைப் பற்றி விமர்சனம் செய்யுங்கள் உருவத்தை கிண்டல் செய்து எழுதாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார். இதன் மூலம் சிம்பு மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். ஏனென்றால் சிம்பு எது பேசினாலும் அதை சர்ச்சையாக மாற்றுவதற்கு என்று சிலர் வருவார்கள். இன்று காலையில் சிம்பு பேசியதை வைத்து புளூசட்டை மாறன் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.