வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், ரூ.48.22 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2016 ம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.இதனையடுத்து பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.
கைது:
இது தொடர்பாக பார்த்தா சாட்டர்ஜியிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுதொடா்பாக பார்த்தா சட்டா்ஜியும் அர்பிதா முகா்ஜியும் 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சா் பார்த்தா சட்டா்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூலை 23-ஆம் தேதியிலிருந்து இருவரும் அமலாக்கத் துறை காவலில் இருந்து வந்தனர்.
சொத்து முடக்கம்:
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், ரூ.48.22 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் குடியிருப்புகள், பண்ணை வீடுகள், நிலப்பரப்புகள் என 40 கோடி மதிப்புள்ள 40 அசையா சொத்துகள், 35 வங்கிக் கணக்குகள் என 48.22 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துடக்களை அமலாக்கத் துறை இன்று(செப்.,19) முடக்கியுள்ளது.
அர்பிதாவுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.49.80 கோடி ரொக்கப் பணம், நகைகள், தங்கக் கட்டிகள், நிலம், கட்டடங்கள், பண்ணைவீடு சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement