ராணியாரின் இறுதிச் சடங்கு… துக்கம் தாளாமல் விம்மிய ஹரி: வெளியான காட்சிகள்


இளவரசர் ஹரி துக்க உடை அணிந்து உணர்ச்சிவசப்பட்டு மிகவும் சோகத்துடனே காணப்பட்டார்.

ராணியாரின் 8 பேரப்பிள்ளைகள் இணைந்து சுமார் 15 நிமிடங்கள் சிறப்பு மரியாதை செலுத்தினர்.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்படும் ராணியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ள இளவரசர் ஹரி துக்கம் தாளாமல் விம்மும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

மறைந்த ராணியாரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிச் சடங்கை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானோர் பார்வையிடும் நிலையில், இளவரசர் ஹரி துக்க உடை அணிந்து உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.

ராணியாரின் இறுதிச் சடங்கு... துக்கம் தாளாமல் விம்மிய ஹரி: வெளியான காட்சிகள் | Queen Funeral Harry Looks Tearful Emotional

@getty

இறுதிச்சடங்கு முன்னெடுக்கப்படும் முன்னர் வாகனத்தில் பயணிக்கும் போதே ஹரி மிகவும் சோகத்துடனே காணப்பட்டுள்ளார்.
இளவரசர் ஹரி தமது மனைவியுடனும் சகோதரர் வில்லியம் குடும்பத்தினருடனும், ராணியார் காலமான பின்னர் ஒன்றாகவே காணப்பட்டார்.

இதனிடையே, சனிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு மரியாதை நிகழ்வில் இளவரசர் ஹரி இராணுவ உடை அணிந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டது.
தொடர்ந்து ராணியாரின் 8 பேரப்பிள்ளைகள் இணைந்து சுமார் 15 நிமிடங்கள் சிறப்பு மரியாதை செலுத்தினர்.

ராணியாரின் இறுதிச் சடங்கு... துக்கம் தாளாமல் விம்மிய ஹரி: வெளியான காட்சிகள் | Queen Funeral Harry Looks Tearful Emotional

@getty

கடந்த வாரம், பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்மின்ஸ்டர் ஹால் வரையில் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலத்தில் இளவரசர் ஹரி தனது பாட்டியின் சவப்பெட்டியின் பின்னால் நடந்து சென்று, வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் நடந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வின் போதும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

இன்று, மன்னர் சார்லஸ் முன்செல்ல, அவருக்கு பின்னால் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் நடந்து செல்ல, இவர்கள் முன்னால் ராணியாரின் இறுதி ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

ராணியாரின் இறுதிச் சடங்கு... துக்கம் தாளாமல் விம்மிய ஹரி: வெளியான காட்சிகள் | Queen Funeral Harry Looks Tearful Emotional

@AP

உள்ளூர் நேரப்படி பகல் 10.44 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் ராணியாரின் உடல் இறுதி மரியாதைக்காக கொண்டு சேர்க்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உலகெங்கிலும் இருந்து 2,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வுகள் முடிவுக்கு வருவதை தேசிய கீதம் இசைக்கப்பட்டு உலகிற்கு தெரியப்படுத்த உள்ளனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் ராணியார் உடல் விண்ட்சர் கோட்டைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டு,
அங்குள்ள மன்னர் ஜோர்ஜ் சிற்றாலயத்தில், 18 மாதத்திற்கு முன்னர் காலமான இளவரசர் பிலிப்புடன் நல்லடக்கம் செய்யப்படுவார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.