மன்னர் மூன்றாம் சார்லஸ் அவரது தாய்க்கு தனது இறுதி செய்தியை அறிவித்தார்.
ராணியின் சவப்பெட்டி மீது பூக்களுடன் வைக்கப்பட்டது மன்னரின் கடிதம்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியின் மீது அரசர் தன் தாய்க்கு எழுதி அனுப்பியுள்ள இறுதிச் செய்தி இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு விழா வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் நடைபெற்று வருகிறது, இந்த இறுதிச் சடங்குடன் ராணி இரண்டாம் எலிசபெத் தனது இறுதி பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.
SKY NEWS
இந்நிலையில், பிரித்தானிய மகாராணியின் மகன் மற்றும் நாட்டின் அரசன் ஆகிய மூன்றாம் சார்லஸ், தனது தாய்க்கு இறுதி செய்தியை அவரது பூத உடல் அடங்கிய சவப்பெட்டி மீது வைத்து அனுப்பியுள்ளார்.
பூக்களால் படர்ந்த ராணியின் சவப்பெட்டி மீது மிகச் சிறிய அட்டையில் மன்னர் மூன்றாம் சார்லஸ்-ஆல் அவரது தாய்க்கு இறுதியாக எழுதப்பட்ட கடிதம் வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் “அன்பான மற்றும் அர்ப்பணிப்பு உள்ள நினைவுடன். சார்லஸ் ஆர்.” என எளிமையாக எழுதப்பட்டு உள்ளது.
SKY NEWS
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் நல்ல யோசனை அல்ல: ஐ.நா பொதுச்செயலாளர் அறிவிப்பு
மேலும் பக்கிங்ஹாம் அரண்மனை, கிளாரன்ஸ் ஹவுஸ் மற்றும் ஹைக்ரோவ் ஹவுஸ் ஆகியவற்றின் தோட்டங்களில் இருந்து வெட்டப்பட்ட பூக்கள் மற்றும் பசுமைகள் பிரித்தானிய மகாராணியின் சவப்பெட்டி மீது வைக்கப்பட்டுள்ளது இவை அவற்றிக்கான அடையாளங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.