சிம்புவுக்கு ஜனாதிபதி விருது, 'வெந்து தணிந்தது காடு' தயாரிப்பாளரின் ஆசை

சிம்பு, சித்தி இத்னானி மற்றும் பலர் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படம் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தாலும், சிம்புவின் நடிப்பிற்கு விமர்சகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர். வழக்கமான சிம்புவாக இல்லாமல் வேறு சிம்புவாக மாறி 'முத்து' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற படத்திற்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். இந்தப் படம் ஹிட் இல்லை, பம்பர் ஹிட். ஒரு தயாரிப்பாளரா நான் சொல்றேன். தமிழகத்துல மட்டுமல்ல, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பைல, எல்லா ஸ்டேட்லயும் நல்லா போயிட்டிருக்கு. நாலு நாள்தான் ஆச்சி. கலெக்ஷனை சொல்ல வேணான்னு நினைக்கிறேன். நல்ல பெரிய கலெக்ஷன்ஸ் வந்திருக்கு. இந்த கலெக்ஷனை நான் எதிர்பார்க்கல. அதுக்காக நான் மகிழ்ச்சியாகல, எங்க கம்பெனில நல்ல படம் வந்திருக்குன்னு மகிழ்ச்சி.

இந்தப் படத்துல நடிச்சி சிம்பு, முத்து கதாபாத்திரமாவே வாழ்ந்திருக்காரு. அவருடைய ஒவ்வொரு சீனையும் நான் ரசிச்சிப் பார்த்தேன். நிச்சயமா இந்தப் படத்துக்கு அவருடைய நடிப்புக்கு அடுத்த வருஷம் ஜனாதிபதி விருது அவர் வாங்கியே ஆகணும். அதான் எங்களுடைய ஆசை. அதற்கான எல்லா வேலைகளையும் செய்வதற்கு எங்க நிறுவனம் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு பத்திரிகையாளர்களும் உதவி பண்ணனும்கறது என் வேண்டுகோள். அதற்கு அவர் தகுதியானவர், நிச்சயம் கிடைத்தே ஆக வேண்டும். குழந்தையில இருந்தே நடிச்சிட்டு வராரு. இந்தப் படத்துக்காக நிறைய செஞ்சிருக்காரு,” எனப் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.