காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண் குழந்தைகள், பள்ளிக்கு செல்ல தடை விதித்து, அவர்களுக்கு கல்வி அளிக்க மறுத்து வருவதற்கு ஐநா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே தாலிபான்கள், பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில், உரிமைகள் எதுவும் தரவில்லை.
எதிர்பார்த்தபடியே ஆடைக்கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது.
சீக்ரெட் ஸ்கூல்
திரைச்சீலை உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வேண்டும் என்றும், பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்துவர் என்றும் உத்தரவிட்டனர். அதேபோல, மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டது.. பல்கலைக் கழகங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துவிட்டனர்.. ஆட்சிக்கு வந்து இத்தனை மாதங்கள் ஆனபோதிலும், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.. பெண் குழந்தைகளால் பள்ளிக்கு ஒருவருடமாகவே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரகசிய பள்ளிகள்
ஒரு வருடமாகவே, பிள்ளைகள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு பெண், குழந்தைகளுக்கு பாடம் நடத்த முன்வந்தார்.. அந்த பெண் பெயர் சோடா நஜந்த்.. காபூலை சேர்ந்தவர்.. பிள்ளைகள் வறுமையால் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதை எண்ணி வேதனைப்பட்ட சோடா, அவர்களுக்கு இலவச பாடம் நடத்த முன்வந்தார். அதுவும் தெருவில் வியாபாரம் செய்து வரும் குழந்தைகளுக்கு பாடங்களை கற்று கொடுக்கவே முதலில் தொடங்கினார்.. இந்த பெண் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆவார்.. தெருவில் வியாபாரம் செய்து வரும் பிள்ளைகளை, காபூல் பூங்காவிற்கு அழைத்து சென்று, அங்கு உட்கார வைத்து பாடம் சொல்லி தந்து வருகிறார்.. கிட்டத்தட்ட 3 மணி நேரம் பாடம் நடத்துகிறார். கடந்த ஒரு வருட மாத காலமாகவே இந்த முயற்சியை இந்த பெண் எடுத்து வருகிறார்..
DARK PERIOD & இருண்ட காலம்
எனினும், கல்வியை நோக்கி அடியெடுத்து வைத்து கொண்டிருந்த பெண்களுக்கு, உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதும், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதும், மீளா துயரில் ஆழ்த்தி வருகிறது. இப்படி பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தடை விதித்து, அவர்களுக்கு கல்வி அளிக்க மறுத்து வருவதற்கு ஐநா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது… 7 வயது முதல் 12 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு நேற்றுடன் ஒரு வருடம் முடிவடைந்துவிட்டது.. நங்காகர், பர்வான் மாகாணங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள், இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு “ஓராண்டு இருண்ட காலம்” என்ற தலைப்பில் கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளனர்.
வெட்கம்
இந்நிலையில்தான், அதிர்ந்துபோன ஐநா ஆப்கனை கண்டித்துள்ளது.. ஆப்கானிஸ்தானுக்கான ஐநா தூதர் மார்கஸ் பொட்செல் இதை பற்றி சொல்லும்போது, “தலிபான் தலைமையிலான அரசு 7 முதல் 12 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுப்பது வெட்கக்கேடானது… இது போன்ற அடிப்படை சுதந்திரம் பறிக்கப்படுவது பாதுகாப்பின்மை, வறுமை உள்ளிட்ட பொருளாதார சிக்கல்களை மேலும் தீவிரப்படுத்தும். அதனால், பெண் குழந்தைகளை பள்ளி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.