ஃபெட் எக்ஸ் (FedEx) ரெசசன் அச்சம் காரணமாகப் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுப்பதிலிருந்து பின்வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
லாஜிஸ்டிக் நிறுவனமான FedEx நிறுவனம் மெம்பிஸ், டென்னசை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் லாஜிஎஸ்டிக் ஆர்டர்கள் சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகக் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது.
கடைசியில் டிசிஎஸ்-ம் அறிவித்தது.. ஐடி ஊழியர்கள் ஷாக்..!
இந்திய சிஇஓ
அமெரிக்காவின் முன்னணி கொரியர் டெலிவரி சேவை நிறுவனமான FedEx நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக இந்திய அமெரிக்கரான ராஜ் சுப்பிரமணியம் ஜூன் மாதம் பொறுப்பேற்றார். இந்நிலையில் சிஎன்பிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் முதல் காலாண்டில் தங்களது ஷிப்மெண்ட் எண்ணிக்கை சரிந்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் பணிக்கு எடுப்பது நிறுத்தம்
எனவே FedEx ஸ்டோர்களை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுப்பதையும் தற்காலிகமாக நிறுத்துதவதாக தெரிவித்துள்ளது.
அலுவலகங்கள் மூடல்
உலகம் முழுவதும் குறைந்தது 90 FedEx அலுவலகங்கள் மற்றும் 5 கார்ப்ரேட் அலுவலகங்களையும் ஃபெட் எக்ஸ் மூட உள்ளது. மேலும் ஞாயிறு சேவைகளையும் குறைக்க முடிவு செய்துள்ளது.
ரெசசன்
ரெசசனுக்கு FedEx தயாராகி வருகிறதா என ராஜ் சுப்ரமணியனிடம் கேட்ட போது, “அப்படிதான் நினைக்கிறேன். உங்களுக்கும் தெரியும் இந்த எண்கள் நன்றாக இல்லை.” என கூறியுள்ளார். சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த நிறுவனத்தின் ஆர்டர்கள் மேலும் குறைய அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வருவாய் சரிவு
FedEx நிறுவனம் எதிர்பார்த்ததை விட 300 மில்லியன் டாலர் வருமான சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. FedEx நிறுவனம் பெரும்பாலும் அமெரிக்காவில் இ-காமர்ஸ் டெலிவரியை செய்து வருகிறது. ஐரோப்பிய மற்றும் ஆசிய வணிகத்திலும் சரிவை சந்தித்துள்ளது. இந்த ஒரு பிரிவு மட்டும் 500 மில்லியன் டாலர் வரை வருமானம் சரிந்துள்ளது.
Recession Expectation, FedEx Closing Offices And Freezes Hiring
Recession Expectation, FedEx Closing Offices And Freezes Hiring | ரெஷசன் வரப்போகிறது.. புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுப்பதை நிறுத்திய FedEx!