கராச்சி இலங்கை துணைத் தூதரகம் , பாகிஸ்தான் இலங்கை வர்த்தக மன்றம் இணைந்து ஆசிய கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியின் நேரடிக் காட்சி கராச்சியில் ஏற்பாடு

கராச்சியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகமும், பாகிஸ்தான் இலங்கை வர்த்தக மன்றமும் இணைந்து 2022 செப்டெம்பர் 11ஆந் திகதி இலங்கை துணைத் தூதரகத்தில் ஆசியக் கிண்ண இறுதிக் கிரிக்கெட் போட்டியின் நேரடிக் காட்சியை திரையிடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தன.

கராச்சியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஜகத் அபேவர்ண, பாகிஸ்தான் இலங்கை வர்த்தக மன்றத்தின் தலைவர் அஸ்லம் பகாலி மற்றும் பாகிஸ்தான் இலங்கை வர்த்தக மன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சாகிப் ரவுஃப், பாகிஸ்தானின் வர்த்தக அபிவிருத்தி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அதார் ஹூசைன் கோகர், கராச்சியில் உள்ள பாகிஸ்தான் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி இப்திகார் அஹ்மத், கொரங்கி வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கத்தின் தலைவர் சல்மான் அஸ்லாம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகாமையாளர் சமன் ரத்நாயக்க, கராச்சியில் உள்ள இலங்கையின் சமூகத் தலைவர்கள் மற்றும் மாணவர்கள், வர்த்தக சமூகம், பயண வர்த்தகம் மற்றும் ஊடகங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள் உட்பட சுமார் 100 பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நேரடி ஒளிபரப்பு உட்பட இந்த நிகழ்வுக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து முக்கிய அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் பரந்த விளம்பரத்தை வழங்கின.

இலங்கையின் துணைத்தூதரகம்,
கராச்சி
2022 செப்டம்பர் 16

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.