ரூ.2140 கோடி நட்டமா? புதிய ஐபிஓ ஆவணங்களைத் தாக்கல் செய்த ஓயோ ரூம்ஸ்!

2022-2023 நிதியாண்டில் ஓயோ நிறுவனம் முதல் காலாண்டு 1,159.3 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளதாக செபிக்கு தாக்கல் செய்த ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

சென்ற நிதியாண்டுடன் ஒப்பிடும் போது ஓயோ நிறுவனத்தின் வருவாய் 3,962 கோடியிலிருந்து 4781.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு பிறகு ஹோட்டல் துறை மீண்டு வருவதையே இது காட்டுகிறது.

ரெசிஷனிலும் அசராத டிசிஎஸ்.. ஐடி ஊழியர்களுக்குக் கொண்டாட்டம் தான்..!

நட்டம்

நட்டம்

சென்ற ஆண்டு ஓயோ நிறுவனம் 4103 கோடி ரூபாய் நட்டம் அடைந்து இருந்த நிலையில் 2022-ம் நிதியாண்டில் 2140 கோடி ரூபாயாக அதன் நட்டம் குறைந்துள்ளது. செபியில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய நிதிநிலைகளின்படி, நிறுவனம் காலாண்டில் ரூ.7 கோடி சரிசெய்யப்பட்ட EBITDA என அறிவித்தது. நிறுவனம் தனது முதல் EBITDA-பாசிட்டிவ் காலாண்டு எனக் கூறியபோதும், தொடர்ச்சியான செயல்பாடுகளால் காலாண்டில் அதன் இழப்பு ரூ.414 கோடியாக இருந்தது.

வளர்ச்சி உச்சம்

வளர்ச்சி உச்சம்

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஹோட்டலுக்கான மொத்த முன்பதிவு மதிப்பில் 47% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இது 2222ஆம் நிதியாண்டிற்கான ரூ.2.21 லட்சத்திலிருந்து ரூ.3.25 லட்சமாக இருந்தது. கொரோனாவில் இருந்து ஹோட்டல் மற்றும் பயணம் துறை மீண்டுள்ளதையே இந்த தரவு காட்டுகிறது.

செலவு
 

செலவு

2021 நிதியாண்டில் ஒயோவின் மொத்த செலவு 6,937 கோடி ரூபாயாக இருந்தது 2022 நிதியாண்டில் 6,984 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. நிர்வாக செலவுகள் 927 கோடி ரூபாயிலிருந்து 515 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.

ஊழியர்கள்

ஊழியர்கள்

ஊழியர்களுக்கு செய்யப்படும் செலவும், பங்குகள் வழங்குவதும் 1,520 கோடி ரூபாயிலிருந்து 1117.2 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஸ்டோர் எண்ணிக்கை

ஸ்டோர் எண்ணிக்கை

சென்ற நிதியாண்டு இறுதியில் ஓயோ ரூம்ஸ் எண்ணிக்கை மொத்தமாக 1.57 லட்சமாக இருந்தது. அடுத்த நிதியாண்டு இறுதிக்குள் அது 1.68 லட்சமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rs 2,140 crore Loss In FY22. Oyo Files Fresh IPO Docs With SEBI

Rs 2,140 crore Loss In FY22. Oyo Files Fresh IPO Docs With SEBI | ரூ.2140 கோடி நட்டமா? புதிய ஐபிஓ ஆவணங்களைத் தாக்கல் செய்த ஓயோ ரூம்ஸ்!

Story first published: Monday, September 19, 2022, 22:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.