ஓபிஎஸ் நடத்திய சிறப்பு ஹோமம்… இபிஎஸ்ஸை வீழ்த்துமா?

அதிமுக ஒற்றை தலைமை யுத்தத்தில் கட்சிரீதியாகவும், சட்டரீதியாகவும் ஓபிஎஸ் அன்கோவை வென்று வீறுநடை போட்டு வருகிறார் இபிஎஸ். இதனால் செம அப்செட்டில் உள்ள ஓபிஎஸ்லை மேலும் வெறுப்பேற்றும் விதமாக இன்றிரவு டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அங்கு மூன்று நாட்கள் முகாமிட்டு இருக்கும் இபிஎஸ், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முககிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

அத்துடன், கட்சியின் தலைமை விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பினரின் முறையீட்டுக்கு எதிராக இபிஎஸ் முறையிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதாவது கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி அவர் ஆணையத்தில் முறையீடு செய்வார் எனத் தெரிகிறது.

ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அளித்திருந்த தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கட்சி விவகாரம் தொடர்பான இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற விவகாரங்களை உயர் நீதிமன்றம் அளவிலேயே முடித்து கொள்ள ஏற்கெனவே அறிவுறுத்தி இருப்பதால், ஓபிஎஸ்சின் தற்போதைய மேல்முறையீடு எந்த அளவுக்கு எடுபடும் என தெரியாது என்பதால் இபிஎஸ் செம ஹேப்பி மோடில் இருக்கிறாராம்.

இந்த நிலையில் ஓபிஎஸ்சுக்கு உள்ள கடைசி வாய்ப்பு தேர்தல் ஆணையம் மட்டுமே. அங்கு சென்று வெற்றி பெற்றுவிட்டால் ஓபிஎஸ்சின் ஆட்டத்துக்கு மொத்தமாக முடிவு கட்டிவிடலாம் என்ற பக்கா பிளானுடன் இன்றிரவு டெல்லிக்கு பிளைட் ஏறி உள்ளார் இபிஎஸ்.

இபிஎஸ்சின் டெல்லி பயணம் ஒருபுறமிருக்க, தமது குடும்பத்துடன் ராமேஸ்வரத்துக்கு பயணித்துள்ளார் ஓபிஎஸ் அங்குள்ள ஒரு பிரபல மடத்தில் நேற்றிரவு நடைபெற்ற சிறப்பு ஹோமத்தில் தமது குடும்பத்தினருடன் பங்கேற்றார் ஓபிஎஸ். அதைதொடர்ந்து நவக்கிரக ஹோமம், கோயில் மூலவருக்கு ருத்ராபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. இவை அனைத்திலும் ஓ.பன்னீர்செல்வம் பக்தி, பரவசத்துடன் பங்கேற்றார். ராமேஸ்வரத்தை அடுத்து, அலர் குடும்பத்துடன் வாரணாசிக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓபிஎஸ்சின் இந்த ஹோமம், யாகம் போன்றவற்றின் விளைவாக, இபிஎஸ்ஸை வீழ்த்தி, அதிமுகவில் மீண்டும் அவர் செல்வாக்குடன் வளம் வருவாரா என்ற எதிர்ப்பார்ப்பை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.

முன்னதாக, குடும்பத்தினருடன் கடந்த வாரம் தேனிக்கு செண்ற ஓபிஎஸ், அங்கு குலதெய்வ வழிபாடு நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் என்பதும், தொடர்ந்து காசி்ககு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.