பிரிட்டனில் முடியாட்சி செய்த இரண்டாவது எலிசெபெத் மகாராணி, இன்று நிரந்தர பிரியாவிடை பெற்றார்.
கடந்த பத்து நாட்களாக பொது மக்கள் மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்திய வெஸ்ட்-மின்ஸ்ட்டர் அபே மண்டபத்தில் இன்று (19) இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.
மகாராணி கடந்த 8 ஆம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.இறக்கும் போது 96 வயது.
இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பொதுநலவாய நாடுகளின் இராஜ்ஜியத் தலைவர்கள் அடங்கலாக பல முக்கியஸ்தர்களும் ,இலங்கையின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதிக் கிரியைகளில் பங்கேற்றனர்.
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு அழைப்பு விடுக்காததால் அந்த நாடுகளின் தலைவர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை
இலண்டன் நேரப்படி இன்று முற்பகல் 11 மணிக்கு இறுதிக் கிரியைகள் ஆரம்பமானது,
ஐக்கிய இராச்சியம் முழுவதும் இரண்டு நிமிட நேரம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ‘கோட் சேவ் த கிங்’ என்ற பாடல் பாடப்பட்டது. இதற்கு முன்னதாக, ‘கோட் சேவ் த குயீன்’ என்று பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பின்னர், மறைந்த மகாராணியாரின் பூதவுடல் தாங்கிய பேழை லண்டன் நகர வீதிகள் ஊடாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வின்ட்சர் மாளிகையை சென்றது. அங்கு இடம்பெற்ற கிரியைகளைத் தொடர்ந்து, மகாராணியாரின் பூதவுடல் செயின்ட் ஜோர்ட் தேவாலய வளாகத்தில் தமது தாய்-தந்தையர், சகோதரி, அன்புக்கணவர் பிலிப் ஆகியோரது கல்லறைகளுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மகாராணியாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான நிகழ்ச்சிகள் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊடாக நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டன . இதனை உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் நேரில் பார்த்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மகாராணி கடந்த 8 ஆம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.இறக்கும் போது 96 வயது.என்பது குறிப்பிடத்தக்கது.