பொதுவாக வங்கியிலோ அல்லது நிதி நிறுவனத்திலோ ஒருவர் கடன் வாங்கியிருக்கும்போது இறந்து விட்டால் அடுத்து என்ன நடக்கும்? என்றேனும் யோசித்திருக்கீர்களா?
குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை செலுத்தாவிடில், கடன் வாங்குபவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வங்கிகளுக்கு உரிமை உண்டு.
முதன்மை கடன் வாங்கியவர் திருப்பி செலுத்துவதற்கு முன்பு இறந்து விட்டால், அது உத்தரவாதம் அளித்தவர் அல்லது சட்டபூர்வ வாரிசிடம் இருந்து வங்கித் தொகையை மீட்க முடியும்.
யார் இந்த நஜீப் ரசாக்.. மலேசியாவை புரட்டி போட்ட நிதி மோசடி.. இவர் இப்படி செய்யலாமா?
யாரையும் கேட்க முடியாது?
எனினும் இது கடன் வாங்கியவர் வாங்கிய கடனை பொறுத்து மாறுபடும். குறிப்பாக பர்சனல் லோன் அல்லது தனி நபர் கடனில் , சட்ட பூர்வ வாரிசுகளோ அல்லது இறந்த கடனாளியின் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களையோ அல்லது நிலுவைத் தொகையையோ எஞ்சியிருக்கும் உறுப்பினர்களை திரும்ப செலுத்துமாறு கேட்க முடியாது.
தள்ளுபடி செய்யப்படும்
ஏனெனில் தனி நபர் கடனில் எந்தவிதமான பிணையமும் வாங்கப்படுவதில்லை. ஆக வங்கி கடன் வாங்கியவரின் எந்தவொரு சொத்தினையும் கைப்பற்றி விற்க முடியாது. கடன் வாங்கியவர் இறந்து விட்டால் இது வாரக்கடனில் சேர்க்கப்பட்டு, அது இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். இதில் கிரெடிட் கார்டு உள்ளிட்ட கடனும் அடங்கும்.
காப்பீடுடன் கடன்
எனினும் இணை கையெப்பமிடுபவர் அல்லது இணை விண்ணப்பதாரர் இருந்தால், அதனை மாற்றிக் கொள்ளலாம். தற்போது இதுபோன்ற கடன்கள் காப்பீட்டுடன் வழங்கப்படுகின்றன. இந்த காப்பீடானது கடன் முழுமையாக செலுத்தும் காலத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. கடன் பெறுவர் இதற்கான காப்பீட்டு பிரீமியத்தினை கடன் பெறும்பொது செலுத்துகிறார்கள்.
சொத்து பறிமுதல்
வீட்டுக் கடனை பொறுத்தவரையில் முதன்மை கடன் பெற்றவர் இறந்து விட்டால், இணை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டியிருக்கும். அப்படி செலுத்தாவிடில் சட்டபூர்வ வாரிசுகள் செலுத்த வேண்டியிருக்கும். அதனை செலுத்தாதபட்சத்தில் கடனை வசூலிக்க சொத்தினை பறிமுதல் செய்து விற்பனை செய்து, அதன் மூலம் கடனை வசூலித்து கொள்கிறது.
வாகனக் கடன்?
இதுபோன்ற காலகட்டங்களில் கடன் வாங்கியவரின் வாரிசுதாரர் கடனை மறுசீரமைத்துக் கொள்ளலாம். இதேபோல் தான் வாகன கடனிலும், கட்டாத பட்சத்தில் வாகனத்தை பறிமுதல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.
Who pays the loan if the borrower dies?
Who pays the loan if the borrower dies?/ கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் கடனை யார் செலுத்த வேண்டும்.. தெரிந்து கொள்ள வேண்டியது?