பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் இருந்து துபாய் நோக்கி பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது, திடீரென பயணி ஒருவர் எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த இளைஞர் தனது கைகளால் இருக்கைகளை குத்தியும், விமானத்தின் ஜன்னலை உதைத்தும், விமான ஊழியர்களுடன் சண்டையிலும் ஈடுபட்டதாலும் நடுவிமானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் இருக்கைகளின் நடுவில் பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் காலை நீட்டி குப்புறப்படுத்து கொண்டார். இதையடுத்து, விமான ஊழியர்களுடன் சண்டையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானச் சட்டத்தின்படி, பயணி தனது இருக்கையில் கட்டி வைக்கப்பட்டார்.
விமானி உடனடியாக துபாயில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியை தொடர்பு கொண்டு நடந்ததை கூறி பாதுகாப்பு கோரியிருக்கிறார். விமானம் துபாயில் தரை இறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் பயணியை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பயணியை பாகிஸ்தான் விமான நிறுவனம் அவரை பிளாக் லிஸ்டில் வைத்து உள்ளது. மேலும் அவர் அந்த விமானத்தில் பயணிக்க முடியாது எனக் கூறப்படுகிறது.