கோவை உடையாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வருகின்ற முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு பயிற்சி மையத்தை சார்ந்த மாணவன், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வுக்காக கண்களை கட்டிக்கொண்டு தொடர்ச்சியாக 11 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனையை படைத்துள்ளார்.
கோவையை சார்ந்த கார்த்திக் குமார் மற்றும் சரண்யா தேவியின் ஐந்து வயது மகன் ரக்சன். இவர் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உடையாம்பாளையம் பகுதியில் உள்ள வஞ்சியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் காலை 6:00 மணி முதல் இரவு 7 மணிவரை தொடர்ச்சியாக கண்களைக் கட்டிக் கொண்டு ஒற்றை சிலம்பத்தில் சுமார் 11 மணி நேரம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்த உலக சாதனையை இந்தியன் புக் – ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்துள்ளது.
அதற்கான சான்றிதழ்களை, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் கோவை தலைவர் பிரகாஷ் ராஜ், நடுவர்கள், பிரதீபா, பாலாஜி, ஆகியோர் சிறுவனிடமும், அவர்களது தாய், தந்தையரிடம் வழங்கி சிறுவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“