இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 43 ஆக குறைவடைந்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 4 ஆயிரத்து 43 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 45 இலட்சத்து 43 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கமைய கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 676 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 27 லிருந்து 47 ஆயிரத்து 379 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்து 28 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 216 கோடியே 83 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.