கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல்; 3 காவலர்கள் சஸ்பெண்ட் – ராணிப்பேட்டை எஸ்.பி அதிரடி

ண்மைக்காலமாக தமிழ்நாடு, போதைப் பொருள்களின் புகலிடமாக மாறித் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. போதைப் பொருள்களை பயன்படுத்திவிட்டு இளைஞர்கள் பலரும் செய்யும் அட்டூழியங்கள் பதைபதைக்க வைக்கின்றன. போதைப் பொருள் மாஃபியாக்கள், பள்ளி – கல்லூரி மாணவர்களை டார்கெட் செய்தே விற்பனைச் செய்கிறார்கள். தின்பண்டங்கள்போல சர்வ சாதாரணமாக போதைப்பொருள்கள் கிடைக்கின்றன. இதன் புழக்கத்தை மொத்தமாக துடைத்தெறிய வேண்டும் என்றால், அதற்கு உதவியாக இருப்பவர்களை முதலில் கட்டம் கட்ட வேண்டும் என்பதற்கு உதாரணமாக ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையில் ஒரு அதிரடி சம்பவம் நடந்திருக்கிறது.

கஞ்சா

ராணிப்பேட்டை மாவட்டத்தில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனைச் செய்யும் சட்டவிரோத கும்பலோடு, காவல் துறையினர் சிலரே கூட்டுசேர்ந்து ‘கல்லா’ கட்டுவதாக எஸ்.பி தீபா சத்யனுக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பந்தப்பட்ட காவலர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர். அவர்களின் செல்போன் அழைப்புகளும் ஆய்வுக்குஉட்படுத்தப்பட்டன. அதில், உறுதியான தகவல்கள் கிடைக்கவே, சோளிங்கர் காவல் நிலைய ஏட்டு வேணுகோபால், அரக்கோணம் தாலுகா காவல் நிலைய ஏட்டு ரமேஷ், அரக்கோணம் நகரக் காவல்நிலைய காவலர் கண்ணன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி தீபா சத்யன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.