அந்தோனிபுரம் கிராமத்திற்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம் – கருவாடு பதனிடும் இயந்திரத்திரம் கையளிப்பு

அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கிராமத்தை சேர்ந்த மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடும் இயந்திரத்தினை வழங்கியதுடன் கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பு தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

இதன்போது கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு பண்ணைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது உட்பட பல்வேறு தொழில் சார் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

இலுப்பைக்கடவை கடற்றொழிலாளர் கிராமத்தில் கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கலந்துரையாடல் மூலம் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியதுடன், கலந்துரையாடலுக்கான முன்னாயத்தங்களையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.