அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை குறைக்கும் திமுக அரசு: ஆர்பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

கொண்டு வந்த திட்டங்களை குறைத்து வருவது போல் தற்போது விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் ஊக்க தொகையை திமுக அரசு பாதியாக குறைத்து வருகிறது என்ற ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “பல்வேறு நிலையில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஊக்கதொகைகள் அம்மா காலத்திலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்திலும் வழங்கப்பட்டன.

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வென்றால் ஒரு கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் வென்றால் 50 லட்சம் ரூபாயும், அதே போல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றால் 50 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்றால் 30 லட்சம் ரூபாயும், வெண்கல பதக்கம் வென்றால் 20 லட்சம் ரூபாயும், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் பதக்கம் வென்றால் 50 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்றால் 30 லட்சம் ரூபாயும், வெண்கல பதக்கம் வென்றால் 20 லட்சம் ரூபாயும், உலகச் சாம்பியன் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றால் ஒரு கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வென்றால் 60 லட்சம் ரூபாயும், வெண்கல பதக்கம் வென்றால் 40 லட்ச ரூபாயும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல் வெற்றியாளர்கள் மேம்பாடு திட்டம், பன்னாட்டு அளவிவான போட்டியில் பதக்கம் வெல்வதற்கான ஊக்குவிக்கும் திட்டம், தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகைதிட்டம் உருவாக்கப்பட்டது.

இதில் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் நிதி வழங்கப்பட்டது, பன்னாட்டு அளவிலான போட்டியில் பதக்கம் பெறும் திட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு எடப்பாடியார் கொண்டு வந்தார், இதில் 5 மாற்றுதிறனாளி வீரர்கள் உட்பட 50 விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள், அயல் நாட்டு பயிற்சி பெறுதல், என்று ஆண்டிற்கு 10 லட்சம் வரை தேவையின்அடிப்படையில் நிதி வழங்கப்பட்டு வந்தன, இதற்காக ஆண்டிற்கு 5 கோடியளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் தலை சிறந்த விளையாட்டு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 25 லட்ச ரூபாய் தேவைக்கேற்ற அளவில் நிதிகள் ஒதுக்கப்பட்டு வந்தன.

குறிப்பாக தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் முதல் பரிசு இரண்டு லட்ச ரூபாய், இரண்டாம் பரிசு ஒன்னரை லட்ச ரூபாய், மூன்றாம் பரிசு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது, ஆனால் தற்போது சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு ஒரு லட்ச ரூபாயாகவும், இரண்டாம் பரிசு 75 ஆயிரம் ரூபாயாகவும், மூன்றாம் பரிசு 50 ரூபாய் ஆகவும் பாதியாக குறைக்கப்பட்டு வழங்கப்பட்டதுள்ளது.

இதனால் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், விளையாட்டு ஊக்கத்தொகை மிகவும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது வேதனையாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஏற்கனவே எடப்பாடியார் ஆட்சி காலத்தில் கொண்டு வர திட்டங்களை படிப்படியாக கை வைத்து திமுக அரசு நிறுத்திவிட்டது, தற்போது விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அந்த ஊக்கத் தொகையையும் கை வைத்து பாதியாக குறைத்து விட்டது, ஆகவே எடப்பாடியார் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை மீண்டும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.