மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ பழிவாங்கிய Metaverse கனவு.. 9 மாதத்தில் மொத்த கதையும் மாறியது..!

பலர் நிஜ வாழ்க்கையைத் தேடி அலைந்துகொண்டு இருக்கும் வேளையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மட்டும் டிஜிட்டல் உலகான மெட்டாவெர்ஸ்-ஐ தேடிச் சென்றார்.. இதன் விளைவு என்ன தெரியுமா..?

2022 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இருந்து அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கும், டெக் நிறுவன தலைவர்களுக்கு மோசமான காலம் என்றாலும் மார்க் ஜூக்கர்பெர்க் மட்டும் அதிகப்படியான சரிவையும் பாதிப்பையும் எதிர்கொண்டு உள்ளார். இதனாலேயே மார்க் ஜூக்கர்பெர்க்-ன் வீழ்ச்சி வர்த்தகத் துறையில் தனித்துவமாகத் திகழ்கிறது.

மெட்டா நிறுவனத்திற்கும், மார்க் ஜூக்கர்பெர்க்-க்கும் என்ன ஆச்சு..?

மோடி எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. மக்களுக்கு பாதிப்பா..?

மெட்டவெர்ஸ்

மெட்டவெர்ஸ்

2021ல் இறுதியில் விர்ச்சுவல் உலகான மெட்டவெர்ஸ் துறைக்குள்ள நுழைவதை உறுதி செய்யும் வகையில், தான் ஒரு சமூகவலைத்தள நிறுவனம் மட்டும் இல்லை என்பதை முதலீட்டாளர்களுக்கு உணர்த்தும் வகையில் பேஸ்புக் நிறுவனத்தை மறுசீரமைப்புச் செய்து அனைத்து சமுகவலைதள நிறுவனத்தையும் தனித்தனி நிறுவனமாகப் பிரித்து மெட்டா என்னும் தாய் நிறுவனத்தை உருவாக்கப்பட்டது.

பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனம்

இந்த மறுசீரமைப்புக் காரணமாகச் சில பிரச்சனைகள் இருந்தாலும் உண்மையான பிரச்சனை 2022ல் பேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சரிவு ஏற்படலாம் என அறிவித்த பின்பு தான் உருவானது. டிக்டாக் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாக வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என அறிவிப்பை வெளியிட்டது.

71 பில்லியன் டாலர்
 

71 பில்லியன் டாலர்

இது முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் அதிர்ச்சி அடையச் செய்தது, இதனால் முதலீட்டாளர்கள் மெட்டா பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்த காரணத்தால் மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 71 பில்லியன் டாலர் சரிந்துள்ளது. பல ஆண்டுகளாக டாப் 10 உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் மார்க் ஜூக்கர்பெர்க் தற்போதைய நிலை என்ன தெரியுமா..

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க் 55.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 20வது இடத்தில் உள்ளார், 2014-க்கு பின்பு பெரிய அளவில் பின்தங்கியுள்ளார், தற்போது முன்னணி டெக் பில்லியனர்களைத் தாண்டி வால்மார்ட் வால்டன் குடும்பம், கோச் இண்டஸ்ட்ரீஸ் கோச் குடும்ப உறுப்பினர்களுக்குப் பின்னால் உள்ளார் மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க்.

பெரும் வீழ்ச்சி

பெரும் வீழ்ச்சி

செப்டம்பர் 2021-ல் மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பு 142 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பு வைத்திருந்த நிலையில் இவருக்கு முன்னால் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ் ஆகிய 2 பேர் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 20 பேர் உள்ளனர். வாடிக்கையாளர் வளர்ச்சி குறித்து அறிவித்த நாளில் மட்டும் மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 31 பில்லியன் டாலர் வரையில் சரிந்தது.

FAANG நிறுவனங்கள்

FAANG நிறுவனங்கள்

2022ல் FAANG நிறுவனங்களில் பேஸ்புக் பங்குகள் 57 சதவீதமும், ஆப்பிள் 14 சதவீதமும், அமேசான் 26 சதவீதமும், ஆல்பபெட் 29 சதவீதமும், நெட்பிளிக்ஸ் 60 சதவீதமும் சரிந்துள்ளது. மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பு பெரும் பகுதி மெட்டா பங்குகளைச் சார்ந்து இருக்கும் நிலையில் மெட்டா பங்கு சரிவின் காரணமாக இவருடைய சொத்து மதிப்பும் 71 பில்லியன் டாலர் வரையில் சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mark Zuckerberg worst fall ever $71 Billion Wipeout in 2022; After Metaverse dream

Mark Zuckerberg’s worst fall ever $71 Billion Wipeout in 2022; After Metaverse dream

Story first published: Tuesday, September 20, 2022, 13:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.