காலை உணவு திட்டத்தை கண்காணிக்க சிறப்பு செயலி அறிமுகம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தொடக்க பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு  காலையில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதை  கண்காணிக்க சிறப்பு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 15ந்தேதி அன்று மதுரையில் உள்ள அரசு பணியில், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்து, பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கினார்.

இந்த திட்டத்தின்படி ஒரு இடத்தில் உணவு சமைத்து, பல்வேறு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் உணவு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து காலை உணவு திட்டம் முறையாக செயல்படுத்த படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரே இந்த செயலியை நேரடியாக கண்காணிப்பார் என்றும் உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.