ரூ.20,000 கோடி அரச குடும்பத்து சொத்து.. 30 வருட வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

அரச குடும்பத்தை சொத்தான 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்தை பெறுவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக அரச குடும்பத்தின் வாரிசுகள் சட்ட போராட்டம் நடத்தி உள்ளனர்.

தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானதை அடுத்து இது குறித்த செய்திகள் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் முழு விவரங்கள் குறித்தும் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து தற்போது பார்ப்போம்.

மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ பழிவாங்கிய Metaverse கனவு.. 9 மாதத்தில் மொத்த கதையும் மாறியது..!

ரூ.20 ஆயிரம் கோடி சொத்து

ரூ.20 ஆயிரம் கோடி சொத்து

ஃபரித்கோட் அரச குடும்பத்தின் ரூ.20,000 கோடி மதிப்பிலான சொத்து தகராறு 30 ஆண்டுகால வழக்கிற்கு பின்னர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் வெளியிட்டனர்.

30 ஆண்டுகள் சட்டப்போராட்டம்

30 ஆண்டுகள் சட்டப்போராட்டம்

ஃபரித்கோட் மஹாராஜின் சொத்துக்காக அவரது இரண்டு மகள் கடந்த 30 ஆண்டுகளாக சட்டப்பூர்வமாக போராடினார்கள். இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் வெளியிடப்பட்டது. அரண்மனைகள் மற்றும் கோட்டைகள், வைரங்கள் மற்றும் தங்க நகைகள் உள்பட இந்த சொத்தின் மொத்த மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது.

வழக்கின் முழு விவரங்கள்
 

வழக்கின் முழு விவரங்கள்

1918ஆம் ஆண்டு ஹரிந்தர் சிங் பிரார் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு சமஸ்தானத்தின் மகாராஜாவாக ஆக்கப்பட்டார். அப்போது அவருக்கு 3 வயதுதான். ஹரிந்தர் சிங் சமஸ்தானத்தின் கடைசி மகாராஜா இவர் தான். அவரது மனைவி நரிந்தர் கவுர். இந்த தம்பதிக்கு அம்ரித் கவுர், தீபிந்தர் கவுர், மஹிபிந்தர் கவுர் ஆகிய மூன்று மகள்களும், டிக்கா ஹர்மோஹிந்தர் சிங் என்ற மகனும் இருந்தனர். 1981ஆம் ஆண்டு மகன் ஹர்மோஹிந்தர் சிங் சாலை விபத்தில் காலமானார். அவரது மகன் இறந்த பிறகு, மகாராஜ் மன அழுத்தத்திற்கு ஆளாகி தனது சொத்துக்கள் குறித்து உயில் எழுதி வைத்தார்.

உயிலின் விவரங்கள்

உயிலின் விவரங்கள்

இந்த உயிலின்படி, அவரது சொத்தை பராமரிக்கும் பொறுப்பு மஹாராவல் கேவாஜி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இங்குதான் சர்ச்சை தொடங்கியது. இந்த அறக்கட்டளை 1982ஆம் ஆண்டு அக்டோபரில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. 1989 ஆம் ஆண்டு மகாராஜின் மரணத்திற்குப் பிறகு உயில் வெளிவந்தது. அதில் அவரது இளைய மகள் அம்ரித் கவுர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு சொத்தில் பங்கு கிடையாது என்று தெளிவாக எழுதப்பட்டிருந்தது. அதே நேரத்தில், மகள் தீபிந்தர் கவுரின் பெயர் அறக்கட்டளையின் தலைவராகவும், மஹிபிந்தர் கவுர் அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும் பதிவு செய்யப்பட்டது. 2001 ஆம் ஆண்டில், மகள் மஹிபிந்தர் கவுர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இளையமகள் வழக்கு

இளையமகள் வழக்கு

இந்த நிலையில் இளைய மகள் அம்ரித் கவுர், 1992 நவம்பரில் உள்ளூர் நீதிமன்றத்தில் தனக்கு உரிய உரிமையை பெற மனு தாக்கல் செய்தார். கூட்டுக் குடும்பத்தை சேர்ந்த தனக்கும் சொத்தில் பங்கு பெற வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

தீர்ப்பு

தீர்ப்பு

2013ஆம் ஆண்டு இந்த வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்பு அம்ரித் கவுர் மற்றும் தீபிந்தர் கவுர் ஆகியோருக்கு ஆதரவாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இளைய மகள் அம்ரித் கவுர் உச்சநீதிமன்றம் சென்றார். இப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rs.20,000 crore property case, After 30 years supreme court judgement

Rs.20,000 crore property case, After 30 years supreme court judgement | ரூ.20,000 கோடி அரச குடும்பத்து சொத்து.. 30 வருட வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

Story first published: Tuesday, September 20, 2022, 14:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.