ஆ.ராசாவுக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்: பேசியது என்ன?

2018ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை தரப்பில் பொது சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். அதன்படி, நேற்று (செப்.19) விசாரணைக்கு ஆஜரானார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சங்கரன்கோவில், பாஞ்சாங்குளம் சம்பவம் குறித்து கேட்டதற்கு திராவிட மாடல் என்பது தீண்டாமை. திராவிட மாடல் ஆட்சியில் இதுதான் நடக்கும்.

தேசிய கல்வி கொள்கை வந்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து மொழிகளும் அழிந்துவிடும். புதிய கல்விக் கொள்கை என்பது குழந்தைகளின் மரண சாசனம் என அறிஞர்களே குறிப்பிட்டு விட்டனர்.
மூன்றாம் வகுப்பில் இருந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நீட் தேர்வு என அனைத்திற்கும் தேர்வை எழுதுகின்றனர். ஆனால் நாட்டை ஆளும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் எந்த தேர்வும்
எழுதுவதில்லை. நீட் தேர்வுக்கு முன் தேர்வு எழுதிய மருத்துவர்கள் தகுதியானவர்கள் தானே. நீட் தேர்வில் வட மாநிலங்களில் முறைகேடு செய்து எழுதுவதாக குற்றம் சாட்டினர்.

மனுதர்மத்தில் எழுதி இருந்ததை தான் ஆ.ராசா குறிப்பிட்டார். அதில் இந்துக்களை இழிவாக பேசி உள்ளதை குறிப்பிட்டார். மனுதர்மத்தில் இருப்பதை எடுத்துரைத்தார். நாம் தமிழர் கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. உலகிலேயே மிக தொன்மையான, பழமையான மொழி தமிழ் என பிரதமரே குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும் போது எதற்கு ஹிந்தி படிக்க வேண்டும். தாய்மொழி தமிழை அனைவரும் கற்க வேண்டும்” எனக் கூறினார். முன்னதாக, 2018 மோதல் தொடர்பான வழக்கில், மீண்டும் அடுத்த மாதம் 18ஆம் தேதி சீமான் ஆஜராக வேண்டும் என நீதிபதி பாபு உத்தரவிட்டார்.

செய்தி: க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.