சென்னை: சென்னை வேளச்சேரி நர்மதா தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண் குளிப்பதை குளியல் அறையின் ஜன்னல் வழியாக இருவர் செல்போனில் வீடியோ எடுக்கும்போது அப்பகுதியை சேர்ந்தவர் பார்த்துவிட்டு இருவரையும் அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி தர்மடி கொடுத்துள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் சிறைபிடித்து வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், மடிப்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீராம் ஆகிய இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் பெண் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். பின்னர் போலீசார் அவர்களின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது செல்போனில் குற்றம்சாட்டப்பட்ட வீடியோ மற்றும் போட்டோ எதுவும் இல்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்களின் போனில், வீடியோவோ போட்டோவோ இல்லாததால் என்ன செய்வது என்று புரியாத நிலையில், பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்ததால் அந்த இருவர் மீதான சந்தேகம் போலீசாருக்கு தீரவில்லை. பிறகு, இருவர் மீதுள்ள சந்தேகத்தால், போலீசார் அவர்களது செல்போனை ரெக்கவரி செய்து பார்த்தனர். அதில், பெண்கள் குளிக்கும்போது எடுத்த படம் இருந்தது தெரியவந்துள்ளது.
இருவரும் செல்போனில் எடுத்த படத்தை அழித்துவிட்டு போலீசாரிடமும் பொதுமக்களிடம் தவறான செயலில் ஈடுபடவில்லை என நாடகமாடியது தெரியவந்துள்ளது. இந்த வழக்கை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றியதை தொடர்ந்து மகளிர் போலீசார் வெங்கடேசன் மற்றும் ஸ்ரீராம் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | தாத்தா ஆடும் ஆட்டம், பாத்தா ஆடிப்போயிடுவீங்க: கிரிக்கெட் தாத்தாவின் வைரல் வீடியோ