வில்லங்க சான்றிதழ் முடக்கம், வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில் “ஜி-ஸ்கொயர்”! சீமான்…

திருச்சி: திருச்சி அருகே 6 கிராமங்கள் தங்களுக்கு சொந்தம் என வக்பு வாரியம் அறிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில், இதன் பின்னணியில் முதல்வரின் மருமகன் சபரீசனின் “ஜி-ஸ்கொயர்” நிறுவனம் உள்ளது என நாம் தமிழர் கட்சி தலைவர்  சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நாம் தமிழர், மதிமுக மோதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த நாம் தமிழர்கட்சி தலைவர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், மத்தியஅரசின்  புதிய கல்விக் கொள்கையை கடுமையாக சாடியவர், புதிய கல்வி கொள்கையின் நோக்கம்,  இந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பதுதான் என்று குற்றம் சாட்டினார்.

நீட் தேர்வு தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர்,  தேர்வுக்கு முன்பாகவே நல்ல மருத்துவர்கள் உருவாகி  இருக்கிறார்கள் என்றவர், பரதமர் மோடிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவம் பார்ப்பது ஏற்கனவே இருந்த மருத்துவர்கள்தானே என்று நக்கலடித்தார்.

அதைத்தொடர்ந்து வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அதற்கு பின்னணியில் முதல்வரின் குடும்ப நிறுவனமான “ஜி-ஸ்கொயர்” நிறுவனம் உள்ளது என்று விமர்சித்தவர், இவர்கள்  தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்கள். இனிமேல் வரும் அரசாங்கம் ஏதும் இடம் தேவை என்றாலும் அவர்களிடம் இருந்து தான் வாங்க வேண்டும் என்றார்.

“ஜி- ஸ்கொயர்” சொத்துகள் குறித்த வில்லங்கள் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக தான், பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் பெற முடியாத நிலையை அரசு உருவாக்கி வைத்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

மதங்கள் இல்லை என்று சொல்பவரை செருப்பால் அடிப்பேன் என்று நடிகர் மயில்சாமி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, மதங்கள் இல்லை என்று யாரும் சொல்ல வில்லை எது தங்கள் சமயக் கோட்பாடு என்பதில்தான் வேறுபாடு உள்ளது என விளக்கம் அளித்தார்.

திருச்சியில் 6 கிராமங்கள் எங்களுக்கு சொந்தம்…! வக்பு வாரியம் பகீர் அறிவிப்பு…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.