இலங்கையிலிருந்து அகதிகளாக ஆறு சிறார்கள் உட்பட 12 பேர் மணல் தீடையில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் கடலோர காவல் குழுமம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஏற்கெனவே இலங்கையில் இருந்து வந்த 150 பேர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று மேலும் ஆறு சிறார்கள் உட்பட 12 பேர் தனுஷ்கோடியை அடுத்த நான்காம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டு கடற்கரைக்கு கொண்டுவந்து பின்னர் கடலோர காவல் குழுமம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM