ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை குஜராத்தின் வதோதரா நகருக்கு வந்தார்.
அப்போது, “கட்சி கூட்டம் நடத்த இடம் தேர்வு செய்கையில் 13 முறை மிரட்டல்கள் வந்தன” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பாரதிய ஜனதா போல் நடக்காது. சட்டவிரோத மதுபானத்தை அனுமதிக்காமல், உண்மையான மதுவிலக்கை அமல்படுத்தும்” என்றார்.
மேலும், “ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தை நடத்த குஜராத்தில் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. நாங்கள் ஒரு இடத்தை தேர்வு செய்து உரிமையாளரை அணுகுவோம்.
அதற்குள் அங்கிருந்து மிரட்டல்கள் வரும். இவ்வாறு 13 முறை நடந்துள்ளது” என்றார். முன்னதாக வதோதரா விமான நிலையத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சென்றபோது, மோடி.. மோடி.. என கோஷமிடப்பட்டது.
இதற்கிடையில் குஜராத்தின் மது விலக்கை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால், “ரூ.1500 கோடி கள்ளச் சாராயத்தை பாஜக நடத்துகிறது. நாங்கள் அவ்வாறு அல்லாமல் முறையாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்” என்றார்.
மேலும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு பாராட்டும் தெரிவித்தார். அவர் பஞ்சாப்பில் இலவச மின்சாரம் வழங்குகிறார். அவர் முடிந்தது ஏன் மற்ற கட்சியினரால் முடியவில்லை.
நான் மக்களின் ஆள். என்னால் இதை முடியும். ஆனால் எனக்கு அரசியல் தெரியும். மக்களுக்கு இலவச மின்சாரம் கொடுங்கள். இல்லையென்றால் இதனை நான் செய்வேன்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil