தள்ளாடிய முதல்வர்: விரைவில் விசாரணை| Dinamalar

புதுடில்லி:பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான பகவந்த் மான், குடித்து விட்டு விமானத்தில் ஏறியதாக தகவல் வெளியானதை அடுத்து, ”இந்த சம்பவம் வெளிநாட்டில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரிக்கப்படும்,” என, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறிஉள்ளார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமீபத்தில் ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு சென்றார். பயணத்தை முடித்து, பிராங்பர்ட் விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் பகவந்த் மான், ‘லுப்தான்சா’ விமானத்தில் ஏறி உள்ளார்.தாமதம்அப்போது கால்கள் தள்ளாட, நடக்கக் கூட முடியாத குடிபோதையில் முதல்வர் பகவந்த் மான், தன் இருக்கையில் அமர்ந்துள்ளார். இதை பார்த்த விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது போன்ற பயணியரால், சக பயணியருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் முதல்வர் பகவந்த் மானிடம் பேசிய விமான ஊழியர்கள், அவர் பயணத்தை தொடர அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். முதல்வர் மற்றும் அவருடன் வந்த நான்கைந்து பேர், விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். இதனால் அந்த விமானம் புறப்படுவதில் நான்கு மணி நேரத்துக்கு மேலாக தாமதம் ஏற்பட்டது. வேறு விமானத்தில் பகவந்த் மான் இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், இணைப்பு விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் தான், புதுடில்லி விமானம் தாமதமாக புறப்பட்டதாக லுப்தான்சா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிக்கல்இந்நிலையில், வெளிநாட்டில் பஞ்சாபுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட பகவந்த் மான், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, அகாலி தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜோதிராதித்யா சிந்தியா கூறியதாவது:இந்த சம்பவம் வெளிநாட்டில் நடந்துள்ளதால், அது குறித்து விசாரணை நடத்துவதில் நமக்கு சிக்கல் ஏற்படும். இருந்தாலும், நடந்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையா என்பதை அறிந்து கொள்ள முடியும். இது குறித்து விரைவில் விசாரித்து, அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.