வாட்ஸ் ஆப் ,வீடியோ கால்கள் மூலம் பெண்களுடன் ஆபாசமாகப் பேச வைத்து பலரை மிரட்டி பணம் பறித்த 20 வயது இளைஞனை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
வாட்ஸ் ஆப்பில் அறியாத நபரிடமிருந்து தமக்கு அழைப்பு வந்ததாகவும் ஒரு பெண் தம்மிடம் பேசி ஆபாசமாக நடந்து கொண்டு அதை வீடியோவாக்கி தம்மிடம் 18 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி ராஜஸ்தான் ஆல்வார் பகுதியைச் சேர்ந்த முஸ்தகீம் என்ற இளைஞரைக் கைது செய்தனர்.