அரச குடும்பத்தில் இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு பொறுப்புகள் அதிகம் உள்ளது.
ஹரி சீருடையில் இல்லாமல் சிவில் உடை அணிந்திருந்ததால் எல்லோரது கண்களும் கூட்டத்தில் அவரை நோக்கியே சென்றது.
மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது ஆட்சியில் நிறைய மாற்றங்களைச் செய்வதால், அரச குடும்பத்திற்கு இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் தேவை அதிகமாக இருப்பதாக ராயல் வாழ்க்கை வரலாற்றாசிரியர் டினா பிரவுன் (Tina Brown) கூறினார்.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் அரச குடும்ப உறுப்பினர்களாக தங்கள் பொறுப்புக்களை துறந்துவிட்டு தங்கள் வாழ்க்கையை கலிபோர்னியாவிற்கு மாற்ற முடிவு செய்ததை அடுத்து, சகோதரர்கள் இளவரசர் ஹரி மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் தங்கள் உறவில் ஒரு கொந்தளிப்பான நேரத்தைக் கொண்டிருந்தனர்.
அமெரிக்க தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பான ஹரி-மேகனின் நேர்காணல், அவர்களுக்கு அரசாக குடும்பத்திற்கும் இடையிலான விரிசலை மேலும் பெரிதாகியது.
குடும்பத்திற்கு இடையே பதட்டங்கள் இருந்தபோதிலும், ஹரியும் மேகனும் அரச குடும்பத்துடன் சேர்ந்து மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், அரச குடும்பத்தின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் டினா பிரவுன், இந்த கடினமான நேரத்தில் இளவரசர் ஹரி மேகன் ஜோடி மீண்டும் அரச குடும்பத்துடன் இணைவதைப் பற்றித் பேசியுள்ளார், அது குடும்பத்தின் பிளவைச் சரிசெய்யும் என்று அவர் நம்புகிறார்.
ITV நிகழ்ச்சியில் பேசிய டினா, “வில்லியம் மற்றும் ஹரி இடையே, குறிப்பாக ஒரு காலத்தில் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். அரச குடும்பம் அனைவரும் ஒன்றாக வருவதற்கு இந்த நேரத்தை பயன்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இது பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு நம்பமுடியாத தருணம். சகோதரர்களை மீண்டும் ஒன்றாகப் பார்ப்பதையும் அணிவகுத்துச் செல்வதையும் நாட்டு மக்கள் விரும்பினர், அந்த ஒற்றுமை உணர்வை நேசித்தனர். அவர்கள் அனைவரையும் மீண்டும் ஒன்றாகப் பார்ப்பது மிகவும் அழகான காட்சியாக இருந்தது.
ஹரி ஒரு அற்புதமான மனிதர், அவர் அழகாக இருக்கிறார் என்று நான் நினைத்தேன். வேடிக்கையாக, அவர் சீருடையில் இல்லாமல் சிவில் உடை அணிந்திருந்தார் என்பது உண்மைதான். ஆனால், அந்த ஒரே காரணத்தினாலே எல்லோரது கண்களும் கூட்டத்தில் அவரை நோக்கியே சென்றது.
அவர் தனது புத்தகம் வெளியிடுவது, இந்த ஆவணப்படங்கள் போன்ற விடயங்களையும் விட்டுவிட்டு, நேர்காணல் செய்வதை நிறுத்தும் அவரை, அரச குடும்பத்திற்கு அவர் மீது நம்பிக்கை இருக்காது என்று நான் நினைக்கிறேன்.
அவர் அதைச் செய்தால், ஒரு வழி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், அரச குடும்பத்திற்கு இப்போது அவர்கள் தேவை என்று நான் நினைக்கிறேன், நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.
அதேபோல், இளவரசி கேட் உலகம் முழுவதும் பயணம் செய்வதில் தனது நேரத்தை செலவிட விரும்பவில்லை.
அவர் மேகனை போலவே, மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருக்கிறார், எனவே எப்படியாவது வேலைகளை பிரித்துக்கொடுக்க வேண்டும், அப்படியானால் இதில் ஹரி மற்றும் மேகனுக்கு ஒரு பங்கு இருக்கிறது.
அவர்கள் தானாகவே வந்து எல்லாவற்றையும் செய்யவேண்டும், நிச்சயமாகவே, இது மேகனுக்கு பிடிக்குமா என்றால், வாய்ப்பே இல்லை, ஏனெனில் அவர் அதை முற்றிலுமாக வெறுத்தார்.
ஆனால் மேகன் இங்கே இருந்தார், கூட்டத்தின் எதிர்வினை மற்றும் நல்லெண்ணத்தைப் பார்த்தார், அதை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன்
இரு தரப்பிலும் ஒரு சமரசம் இருக்கலாம் மற்றும் அவர்கள் ஒன்றாக வந்து இந்த விடயங்களை அனைத்தையும் பேசலாம்.” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “சமரசம் செய்து திரும்ப வரலாம், அதேநேரம் அவர்கள் விரும்பியபடி வருடத்தில் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் கலிபோர்னியாவில் செலவிடலாம். அவர்கள் சமரசத்தை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் நபிக்கையாக பேசினார்.
ஆனால், அடுத்து நடக்கப்போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது. இதனிடையே, மேகன் மார்க்கல் தனது மாமனார், மன்னர் மூன்றாம் சார்லஸிடம் தனியாக சந்தித்துப் பேச அனுமதி கோரியுள்ளார் மேகன் மெர்க்கல் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேகனின் இந்த முடிவை பலரும் ஆதரித்துள்ளதுடன், மிகவும் துணிச்சலான நடவடிக்கை எனவும் பாராட்டியுள்ளனர்.
குடும்பத்தில் நிலவும் இறுக்கமான சூழலை போக்கிவிட வேண்டும் என அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.