டெல்லி மீட்டிங்… சீக்ரெட் இதுதான்- அப்டியே ரூட்டை மாற்றிய எடப்பாடி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து தான் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் ஆட்சியில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக் காட்ட வேண்டியது, சரியான நேரத்தில் சரியான இடத்தில் எடுத்துரைக்க வேண்டியது ஜனநாயகக் கடமை. அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தின் நிலை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்டவை குறித்து பேசியதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இதன் பின்னணியில் உட்கட்சி பிரச்சினை தொடர்பாக அரசியல் ரீதியாக வேறு சில விஷயங்களும் இருப்பதாக பேசப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக சட்டப் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் அடுத்தகட்ட நகர்வுகளுக்காகவே டெல்லி சென்றார் என்று எடப்பாடி பழனிசாமியை பற்றி அரசியல் விமர்சகர்கள் பேசுவதை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் டெல்லி சென்று கோவை விமான நிலையம் வந்திறங்கிய எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதலளித்தார்.

அதாவது, உள்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து முக்கியமான சில விஷயங்களை பேசினேன். கோதாவரி – காவரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் போதைப் பொருட்கள் அனைத்து பகுதியிலும் தடையில்லாமல் கிடைக்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், திமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவரும் விலகுவது தான் ”திராவிட மாடல்”. ஆ.ராசா கீழ்த்தரமான மற்றும் இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது. அவர் குறிப்பிட்டு பேசிய அந்த வார்த்தை அவரது கட்சி தலைவரின் குடும்பத்துக்கு பொருந்துமா? அல்லது அவரது மருமகன் திருச்செந்தூரில் யாகம் நடத்தினாரே, அவருக்கும் பொருந்துமா? என்று கேட்டிருந்தேன்.

இன்னும் அவரது கட்சி தலைவர் உரிய பதிலளிக்கவில்லை என்றார். அதிமுக உட்கட்சி விவாகரம் குறித்த கேள்விக்கு, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும் போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அதை பற்றி பேசினால் அது வழக்கிற்கு தடையாக இருக்கும். டெல்லியில் உட்கட்சி விவாகரம் குறித்து பேசியதாக கூறுவது தவறானது.

மனுதர்மத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் – பெரியார் திராவிடர் கழகம் புகார்!

திமுக ஆட்சியில் எதுவும் நடைபெறாமல் இருப்பது குறித்தும், பல்வேறு கோரிக்கைகளை வைக்கவும் தான் டெல்லி சென்றேன். தமிழகத்தில் காய்ச்சல் பரவலை தடுக்க இந்த அரசு விழிப்போடு இருக்க வேண்டும். மருத்துவக் குழு உரிய முறையில் ஆராய்ந்து காய்ச்சல் பரவலை தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று

தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.