உலகின் மிகப் பழமையான மோட்டார் சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கின் புதிய தலைமுறை மாடல் சாலை சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகின்றது. என்ஃபீல்டு நிறுவனத்தின் J-series எஞ்சின் பயன்படுத்தப்பட்ட புதிய மாடல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஜே-சீரிஸ் எஞ்சின், தற்போது இந்நிறுவனத்தின் 350cc பைக் வரிசை கொண்டுள்ளது, இதில் மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹண்டர் 350 ஆகியவை அடங்கும்.
ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350
புதிய தலைமுறை 350 மாடல்களில் இருந்து நன்கு அறியப்பட்ட 349சிசி ஜே-சீரிஸ் 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை எஞ்சின் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
புல்லட் 350 மாடலில் பெரும்பாலான பாகங்கள் கிளாசிக் 350 பைக்கினை போலவே உள்ளது, சில தனித்துவமான மாற்றங்களை புல்லட் 350 கொண்டிருக்கும். இரண்டு துண்டு இருக்கைக்கு பதிலாக ஒற்றை துண்டு உள்ளது. மேலும், பின்புற ஃபெண்டரின் வடிவமைப்பு கிளாசிக்கிலும் வேறுபட்டது. சோதனை ஓட்டத்தில் காணப்பட்ட பைக்கில், கிளாசிக் 350 போன்ற அதே டெயில்-லேம்ப் மற்றும் இண்டிகேட்டர்கள் இடம்பெற்றுள்ளன.
விரைவில் விற்பனைக்கு வர உள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் ஆனது பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கும் எனவே இந்த பைக்கின் விலை சற்று கூடுதலாக அமைந்திருக்கும். என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 குறைந்த விலை மடலாக விளங்குவதனால் அதனை விட சற்று கூடுதலாக ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 ரூபாய் 1.55 லட்சத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது