உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலை நிர்வாகிக்கும் திருமலை தேவஸ்தானத்திடம், அப்துல் கனி – நுபினா பானு ஆகிய இஸ்லாமியத் தம்பதியினர் ரூ.1.02 கோடிக்கான காசோலையைக் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகுலா மண்டபத்தில் செயல் அலுவலர் தர்மா ரெட்டியை சந்தித்து வழங்கியுள்ளனர்.
இந்த காசோலையின் மொத்தத் தொகையில், 15 லட்சம் ரூபாய் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இது தினமும் கோவிலுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுவதற்கான தொகையாகும். மீதமுள்ள 87 லட்சம் தொகையை ஸ்ரீ பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சமையலறையில் புதிய மரச்சாமான்கள் மற்றும் பொருட்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு ஏழுமையான கோயிலுக்கு அப்துல் கனி நன்கொடை அளிப்பது இது முதல் முறையல்ல. தொழிலதிபரான இவர், இதற்கு முன்னதாக கோயிலுக்குக் காய்கறிகள் கொண்டு செல்வதற்காக ரூ.35 லட்சம் மதிப்பிலான குளிர்சாதனப் பெட்டியை வழங்கியுள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டில், கோவிட் -19 நோய் தொற்று காலத்தின் போது, கோயில் வளாகங்களில் கிருமிநாசினிகளைத் தெளிக்க, பல தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட டிராக்டர் பொருத்தப்பட்ட கிருமிநாசினி தெளிப்பானை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM