சென்னை: வைரமுத்துவை விட திறமையான எழுத்தார்கள் வருவார்கள் போவார்கள் என மணிரத்னம் பேசியது இயக்குநர் சீனு ராமசாமியை வெகுவாக பாதித்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் காம்போ என்றால் வரிகளுக்கு வைரமுத்து கண்டிப்பாக இடம்பெற்றிருப்பார்.
ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்துவை முற்றிலுமாக படக்குழு ஒதுக்கி விட்டது.
வைரமுத்துவை ஒதுக்கிய மணிரத்னம்
வைரமுத்துவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி வந்த மணிரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படத்தில் அவரை முற்றிலுமாக ஒதுக்கியது ரசிகர்களை மட்டுமல்ல சில திரையுலக பிரபலங்களையே வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. மணிரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும் கூட வேறு வழியில்லாமல் தான் இந்த முடிவை மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது என்கிற பேச்சுக்களும் அடிபட்டன.
வைரமுத்துவை விட திறமையானவர்கள்
பொன்னியின் செல்வன் படத்தில் மட்டுமின்றி இசை வெளியீட்டு விழாவில் கூட வைரமுத்துவை காணவில்லையே அவருக்கு அழைப்பு விடுக்கவில்லையா? என சில பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மணிரத்னம் தமிழ் பல ஆண்டுகள் பழமையான செம்மொழி. வைரமுத்துவை விட சிறந்தவர்கள் வருவார்கள், போவார்கள் அவருடன் நானும் ஏ.ஆர். ரஹ்மானும் பல படங்களில் பணியாற்றி உள்ளோம், இப்போ புதியவர்களுடன் பணியாற்ற விரும்பி இந்த முடிவை எடுத்துள்ளோம் என பேசியுள்ளார்.
சீனு ராமசாமிக்கு கோபம்
வைரமுத்துவை விட திறமையானவர்கள் வருகிறார்கள் என மணிரத்னம் பேசியதை கேட்ட இயக்குநர் சீனு ராமசாமிக்கு பயங்கர கோபம் எழுந்து விட்டது. தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் சொன்ன வார்த்தை கோவலை மதுரை பாண்டிய மன்னன் கொலை செய்ததற்கு சமம் என்கிற ரீதியில் ஒரு ட்வீட்டை தற்போது போட்டு மணிரத்னத்தை விளாசி உள்ளார்.
கோவலன் கொலை
“புதியவர்கள் வருவர் போவர் ஆனால்
நீங்க பீஷ்மர் #ManiRatnam sir
நீங்கள்
நட்டது விதை விருச்சமாகும்,
புதிய கவிஞருக்கு
வாழ்த்துகள்
ஆனால்
“வைரமுத்துவை
விட என
நீங்கள் திறமை சிறுமை செய்தது கோவலன் கொலை தடுமாற்ற சொற்கள்.
உங்கள் ‘இருவர்’ காலம் கண் மை அல்ல தடம்..” என கவிதையாக ஒரு விளாசல் கமெண்ட்டை போட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சீனு ராமசாமி.
வைரமுத்துவுக்கு தேசிய விருது
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் யுவன் இசையில் வைரமுத்து எழுதிய “எந்த பக்கம் பார்க்கும் போதும் வானம் ஒன்று தான்” என்கிற பாடலுக்காக கடைசியாக தேசிய விருதை பெற்றிருந்தார் வைரமுத்து. தொடர்ந்து தனது படங்களில் வைரமுத்துவை பயன்படுத்தி வருகிறார் சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
மதன் கார்கிக்கும் இடமில்லை
வைரமுத்துவை ஒதுக்கியதை போலவே பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து மதன் கார்கியையும் ஏன் ஒதுக்கினீர்கள் என்கிற கேள்வியை ரசிகர்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னத்தை பார்த்து எழுப்பி வருகின்றனர். ஆர்ஆர்ஆர் படத்தில் நாட்டுக் கூத்து, சீதாராமம் பட பாடல்கள் வசனம் என அனைத்துமே மதன் கார்கி வரிகளில் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், பொன்னியின் செல்வனுக்கு அவரை ஒரு பாடலாவது எழுத வைத்திருக்கலாமே என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.