மேகனை புறக்கணித்து ஹரியை ஒதுக்கி வைப்பதன் பின்னணி இதுவா? அம்பலமான சார்லஸ் மன்னரின் உண்மை முகம்


திரண்டிருந்த மக்களை மன்னர் சார்லஸ், வில்லியம் நேரிடையாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

கருப்பின நபர் ஒருவரை கண்டுகொள்ளாமலும், அவர் நீட்டிய கையை புறக்கணித மன்னர் சார்லஸ் 

மறைந்த பிரித்தானிய ராணியாருக்கு மரியாதை செலுத்த திரண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆறுதல் கூறிய மன்னர் சார்லஸ் தொடர்பில் வெளியாகி கவனத்தை ஈர்க்கும் ஒரு காணொளி, அவரது உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் நல்லடக்கம் திங்கட்கிழமை விண்ட்சர் கோட்டையில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் அர்ப்பணிப்பு ஆராதனைக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளமையால் சில புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
ராணியார் மறைந்த செப்டம்பர் 8ம் திகதிக்கு பின்னர் பல ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனில் திரண்டதுடன், ராணியாருக்கு மலர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில், திரண்டிருந்த மக்களை மன்னர் சார்லஸ் உட்பட, ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் வில்லியம் தம்பதி, ஹரி தம்பதி ஆகியோரும் நேரிடையாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

ஆனால், இந்த நிகழ்வில் மன்னர் சார்லஸ் தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் போது மன்னர் சார்லஸ் திரண்டிருந்த மக்களுக்கு ஆறுதல் கூறுவதுடன், அவர்களுடன் கை குலுக்கி வந்துள்ளார்.
ஆனால், அவர்களுடன் வரிசையில் நின்றிருந்த கருப்பின நபர் ஒருவரை கண்டுகொள்ளாமலும், அவர் நீட்டிய கையை புறக்கணித்தும் மன்னர் சார்லஸ் கடந்து செல்வது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

மேகனை புறக்கணித்து ஹரியை ஒதுக்கி வைப்பதன் பின்னணி இதுவா? அம்பலமான சார்லஸ் மன்னரின் உண்மை முகம் | King Charles Ignore Black Man Mourners

@getty

மட்டுமின்றி, உலகெங்கிலும் இருந்து ராணியாரின் இறுதிச்சடங்குகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தும்,
ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதுடன், அவர்களை மன்னர் சார்லஸ் நேரிடையாக சென்று வரவேற்கவும் இல்லை என கூறப்படுகிறது.

மேலும், மொத்த ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களும் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகளின் தலைவர்கள் தங்களின் வாகனங்களில் பயணப்பட்டுள்ளதும் விவாதமாகியுள்ளது.

மேகனை புறக்கணித்து ஹரியை ஒதுக்கி வைப்பதன் பின்னணி இதுவா? அம்பலமான சார்லஸ் மன்னரின் உண்மை முகம் | King Charles Ignore Black Man Mourners

@getty

தற்போது, இந்த விவகாரத்தை மேகன் மெர்க்கலுடன் இணைத்து சமூக ஊடகங்களில் இணையவாசிகள் விவாதிக்கின்றனர்.
மேகன் மெர்க்கல் கருப்பினத்தவர் என்பதாலையே, ராஜகுடும்பம் புறக்கணிப்பதாகவும், அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், இளவரசர் ஹரியை ஒதுக்கி வைப்பதாகவும் கூறுகின்றனர்.

மன்னர் சார்லஸ் வெறும் இனவாதியா என கேள்வி எழுப்பியுள்ள மக்கள், கருப்பின நபருக்கு கை குலுக்க மறுத்த மன்னர் சார்லஸின் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது எனவும் கொந்தளித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.