பெங்களூரு : ”கர்நாடகாவில் பெண்கள், குழந்தைகள் கடத்தலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்,” என பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் கூறினார்.சட்ட மேலவையில் நேற்று பா.ஜ., உறுப்பினர் ரவிகுமார் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் கூறியதாவது:கடந்த 2021 – 22ம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் சட்டவிரோத கடத்தலை தடுக்க 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை 2.50 லட்சம் ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.
இதில் ஹுப்பள்ளி – தார்வாடில் நடந்த கிராம கைவினை உற்பத்தி பொருள் கண்காட்சிக்கு, 2 லட்சம் ரூபாயும், பெங்களூரில் நடந்த குழந்தைகள் கடத்தலை தடுக்க 50 ஆயிரம் ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள், பெண்கள் கடத்தலை தடுப்பது குறித்து போலீசார், சமூக நலத்துறை, கல்வி, கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், வருவாய், சுகாதாரம், குடும்ப நலத்துறை அதிகாரிகளுடன் செயல் திட்டம் உருவாக்கப்படும்.இது மட்டுமின்றி, பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். உஜ்ஜலா திட்டத்தின் கீழ் செயல்படும், 13 தொண்டு நிறுவனங்களுக்கு நிதி விடுவிப்பதன் மூலம் பெண்கள், குழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement