சென்னையை சேர்ந்த தொழிபதிபர் அப்துல் கனி தனது மனைவி சுபீனா பானு ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று நேற்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அங்கிருந்த ரங்க நாயகி மண்டபத்தில் தேவஸ்தான தலைமை நிர்வாகி தர்மா ரெட்டி அவர்களிடம் கோவிலுக்கு ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக வழங்கினார்.
இதில், இஸ்லாமிய தம்பதி வழங்கிய நன்கொடையானது அன்னப்பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சம், பத்மாவதி ஓய்வறைக்கு ரூ.87 லட்சம் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்க கொடுக்கப்பட்டுள்ளது.
மதம் கடந்து திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்த இஸ்லாமிய குடும்பத்தினர் சுமார் ஒரு கோடி ரூபாய் காணிக்கை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் வேற்று மதத்தினர் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்ற ஒப்புதல் கையெப்பமிட வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.