குருவி சேர்ப்பது போல் சிறுக சிறுக சேமித்து முதலீடு செய்த பணத்தை கடைசியில் க்ளைம் செய்ய முடியாமல் தவிக்கும் சில நிகழ்வுகளை பார்த்திருக்கலாம். ஒரு சிலர் தங்களது குடும்பத்திற்கு தெரியாமல் முதலீடு செய்து விட்டு, இறுதி வரையில் தெரியாமலேயே இறந்திருக்கலாம்.
சிலர் முதலீடு செய்தததையே மறந்திருக்கலாம். இதுபோன்ற ஒரு சில வழங்குகளை நாம் கேள்விப்பட்டிருக்க கூடும்.
அந்த வகையில் நாட்டின் மிக பிரபலமான அஞ்சலக திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் (NSC) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்கள் (SCSS) உள்ளிட்ட பல திட்டங்கள் பற்றி பலரும் அறிந்திருக்கலாம்.
கிட்டதட்ட 6 மாத சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான வாய்ப்பா? இன்று எப்படியிருக்கு தெரியுமா?‘
பாதுகாப்பான முதலீட்டு திட்டங்கள்
இந்த திட்டங்கள் அரசின் பின்னணியில் செயல்படுவதால், இறையாண்மை தன்மை கொண்ட திட்டங்களாகவும் உள்ளன. இதில் நிரந்தர வருமானம் என்பதோடு கூடுதலாக வரி சலுகையும் கிடைக்கிறது. அதோடு அஞ்சலக திட்டங்களில் சந்தை அபாயம் என்பதும் இல்லை என்பதால் இவை பாதுகாப்பான திட்டங்களாகவும் உள்ளன. இந்த திட்டங்களில் முதிர்வுக்கு பிறகும் க்ளைம் செய்யப்படாத தொகையை எவ்வாறு க்ளைம் செய்வது? இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

அதிகாரிகள் தெரியப்படுத்தலாம்
இது பல காரணிகளினால் இருக்கலாம். குறிப்பாக மூத்த குடிமக்கள் தங்கள் வாரிசுகளிடம் சொல்லாமல் போவது, இதற்கான முக்கிய ஆவணங்களை தொலைத்து விடுதல் என பல காரணிகளினால் இருக்கலாம்.
இதுபோன்ற சமயத்தில் அதிகாரிகள் சம்பந்தபட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது முகவரிகள், தொடர்பு எண்களை மாற்றியிருக்கலாம். இதனால் அறியாமல் இருக்கலாம். இதனால் முதலீடுகள் புதுபிக்கப்படாமல் கிடப்பில் இருக்கலாம். இதனை பலரும் இறுதி வரையில் கண்டுபிடிக்க முடியாமலேயே விட்டுவிடுகின்றனர்.

நிதியை என்ன செய்வார்கள்?
முதிர்வு காலத்திற்கு பிறகு உரிமை கோரப்படாத தொகையை வெவ்வெறு அரசாங்க திட்டங்களுக்கு மாற்றப்படும். இந்த திட்டங்களில் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் நேரடியாக அணுகலாம். இந்த நிதிகள் மூத்த குடிமக்கள் நல நிதி (SCWF)ல் இருக்கும். இது கடந்த 2015ல் நிறுவப்பட்டது. இந்த நிதி குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு சமூக நலனுக்காகவும் மூத்த குடிமக்களுக்கு ஆதரவாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்பு
பொதுவாக முதிர்வுகாலம் முடிந்த பிறகு வாடிக்கையாளர்களையோ அல்லது வாடிக்கையாளர்கள் இல்லாத பட்சத்தில் நாமினியிடம் தொடர்பு கொள்வார்கள். அவர்கள் இல்லாத பட்சத்தில் தான் இந்த நிதியானது குறிப்பிட்ட காலக்கெடுக்கு பிறகு மூத்த குடி மக்கள் நல நிதிக்கு மாற்றப்படுகின்றது.

காலக்கெடு
உரிமைகோரப்படாத கணக்குகளில் உள்ள நிலுவைத் தொகைகள், சம்பந்தப்பட்ட பாலிசிதாரர்கள் அல்லது உரிமைகோருபவர்களுக்கு க்ளைம் கோரிக்கையைப் பெற்றவுடன் அவர்களுக்கு சாதகமாகத் தீர்க்கப்படும். அப்படி உரிமைக்கோராப்படாத நிதியானது 25 ஆண்டுகள் வரையில் மூத்த குடி மக்கள் நிதிக்கு மாற்றப்படும். அதன்பிறகும் உரிமைகோரப்படாவிட்டால் அது மத்திய அரசுக்கு மாற்றப்படும்.

எப்படி தெரிந்து கொள்வது?
இதற்கான விவரங்களை இந்தியா போஸ்ட் தளத்தில் பார்த்துக் கொள்ள முடியும்.
இதற்காக https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
இதில் BANKING & REMITTANCE என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் அதற்கான அடுத்த பக்கத்தில் தொடங்கும்.
அடுத்ததாக Post office Savings scheme என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதில் Senior citizen welfare fund என்ற ஆப்சனை கொடுக்கவும். அதில் அஞ்சலகத்தின் எந்த திட்டமோ அதனை கிளிக் செய்து, அதில் எந்த மாநிலம் என்பதையும் கிளிக் செய்ய வேண்டும்.
அதில் ஒரு பிடிஎஃப் பார்மேட்டில் க்ளைம் செய்யப்பட்டதவர்களின் பழைய கணக்கு எண், புதிய கணக்கு எண், எந்த மாவட்டத்தில் போடப்பட்டது என்பன உள்ளிட்ட விவரங்கள் வருகின்றன. ஆக அதனை பார்த்தும் கொள்ளலாம். சந்தேகம் இருப்பின் நேரடியாக அஞ்சலகத்தினை நேரடியாக அணுகி தெரிந்து கொள்ளலாம்.
Not Claimed in PPF, NSC, SCSS Scheme? No worries, how to claim?
Not Claimed in PPF, NSC, SCSS Scheme? No worries, how to claim?/உங்க முதலீட்டை க்ளைம் செய்யவில்லையா.. அஞ்சலக திட்டங்களில் எப்படி தெரிந்து கொள்வது?