சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், சேலத்தை உலக அளவில் பேச வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் செய்ய வேண்டிய திட்டங்களை எதிர்க்கட்சி தலைவராக இருந்து
செய்து வருகிறார். டெல்லி சென்றவர் நடந்தாய் வாழி காவிரி, காவிரி – கோதாவரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக போராடினாலும், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் ஏழை அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் ஏற்படுத்தி தந்தவர் எடப்பாடி பழனிசாமி. 2011க்கு முன்பு முதியோர் உதவித்தொகை 1,200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதுவே அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 4,500 கோடி ரூபாய் வழங்கினார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது ஒரே உத்தரவில் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவிதொகை வழங்க உத்தரவிட்டார். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி அளிக்கப்பட்டது. ஆனால் இவற்றை எல்லாம் நிறுத்தியது திமுக அரசு என்றார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் ஜனநாயகம் இல்லை. அதனால் தான் தற்போது
வெளியேறி இருக்கிறார்.
அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேற உள்ளனர். அதிமுக ஆட்சியில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டது. தற்போது சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் உள்ளது. திமுக அரசை விமர்சித்தால் சோதனை நடத்துகின்றனர். எத்தனை வழக்கு போட்டாலும் சட்டப்படி சந்திப்போம்.
அதிமுக மனித புனிதரால் தொடங்கப்பட்ட, தெய்வ சக்தி பெற்ற இயக்கம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா தான் எடப்பாடியாரை வழி நடத்துகிறது. திமுகவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அது எடப்பாடியாரால் மட்டும் தான் முடியும். மத்திய அரசிடம் இருந்து எத்தனை அழுத்தம் இருந்தாலும் மின்கட்டணத்தை உயர்த்தி ஏழை மக்களுக்கு சுமையை திணிக்கக் கூடாது என்று எடப்பாடியார் கவனமுடன் இருந்தார்.
“ஆ ராசாவின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்” -தமமுக தலைவர் ஜான் பாண்டியன்!
ஆனால் திமுக ஆட்சியில் எல்லாம் தலைகீழாக நடக்கிறது. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் இரட்டை இலை தான் வெற்றிபெறும். தொண்டர்கள் களப்பணியில் கவனம் செலுத்துங்கள் என்று ஆர்.பி.உதயகுமார் கேட்டுக் கொண்டார். இது அதிமுகவினர் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.