ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய, ‘ஐபோன் 14 ப்ரோ’-வை வாங்குவதற்காக கொச்சியில் இருந்து துபாய் சென்ற இளைஞர்..
கொச்சியை சேர்ந்த தீரஜ் என்ற தொழிலதிபர் ஐபோன்களை வாங்குவதில் அலாதி ஆர்வம் உடையவர். இவர், ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ‘ஐபோன் 14 ப்ரோ’ மொபைலை வாங்குவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார்.
இந்த ஐபோன் இந்தியாவில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனவே, இந்தியாவிற்கு வர தாமதமாகும் என்பதால், கடந்த வியாழக்கிழமை துபாய்க்கு சென்று அங்குள்ள மிர்ஃடிப் சிட்டி சென்டரில் உள்ள, ரீசெல்லரிடம் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தனக்கு மிகவும் பிடித்தமான வயலட் நிற ஐபோன் 14 ப்ரோவை வாங்கியிருக்கிறார். இதற்காக 40 ஆயிரம் வரை செலவு செய்து, ரூ.1,29,000 மதிப்புள்ள அந்த போனை வாங்கியுள்ளார்..
இதன்படி இந்த மொபைலை முதலில் வாங்கிய இந்தியர்களில் இவரும் ஒருவர் என்கின்றனர். இவர் இவ்வாறு நீண்ட தூரம் பயணித்து ஐபோன்களை வாங்குவது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது…!