ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. work from anywhere ஆப்ஷன் உடன் வேலை..!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்தும் ஊழியர்கள் வர மறுத்து வரும் வேளையில், இதை எப்படிச் சரி செய்ய வேண்டும் எனத் தெரியாமல் விழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனம் இந்தியாவில் இருந்து சுமார் 9000 டெக் ஊழியர்களை work from anywhere ஆப்ஷனில் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.

இது வொர்க் ப்ரம் ஹோம் விடவும் மிகப்பெரிய சலுகை என்பதால் இந்த அமெரிக்க நிறுவனம் டெக் நிறுவனங்கள் மத்தியில் அதிகப்படியான கவனத்தை ஈர்த்துள்ளது.

ரெசிஷனிலும் அசராத டிசிஎஸ்.. ஐடி ஊழியர்களுக்குக் கொண்டாட்டம் தான்..!

ஊழியர்கள்

ஊழியர்கள்

கொரோனா தொற்று குறைந்த பின்பு உலகளவில் அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் நிலையில், ஊழியர்கள் பயண நேரம், செலவுகள், குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம், இதர வசதிகளைக் கைவிட மனம் இல்லாமல் அலுவலகத்திற்கு வர மறுக்கின்றனர்.

[24]7.ai நிறுவனம்

[24]7.ai நிறுவனம்

இதேவேளையில் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடும் நிறுவனங்கள் ஊழியர்களைத் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி அளிக்கிறது, மறுபுறம் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் அதே வேளையில் செலவுகளைக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டும் [24]7.ai போன்ற நிறுவனங்கள் புதிய வழியைத் தேர்வு செய்துள்ளது.

2ஆம், 3ஆம் தர நகரங்கள்
 

2ஆம், 3ஆம் தர நகரங்கள்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் வாடிக்கையாளர் சேவை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனமான [24]7.ai இந்தியாவில் பெரு நகரங்களை மொத்தமாக ஒதுக்கிவிட்டு 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இருந்து சுமார் 9000 புதிய ஊழியர்களை work from anywhere ஆப்ஷன் உடன் பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.

work from anywhere அப்ஷன்

work from anywhere அப்ஷன்

2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களைக் குறிவைத்து ஊழியர்களைப் பணியில் எடுப்பதே ஜாக்பாட் ஆகப் பார்க்கப்படும் நிலையில் work from anywhere என்ற முக்கியமான ஆப்ஷன் ஊழியர்களுக்கு லைப் டைம் செட்டில்மென்ட் ஆகப் பார்க்கின்றனர். தற்போது work from anywhere ஆப்ஷன் கீழ் [24]7.ai நிறுவனம் வாய்ஸ் மற்றும் சாட் சப்போர்ட் பணிகளுக்காக இந்த 9000 ஊழியர்களைப் பணியில் சேர்க்க உள்ளது.

5000 ஊழியர்களைக்

5000 ஊழியர்களைக்

கடந்த வருடம் கூட [24]7.ai நிறுவனம் இந்தியாவில் இருந்து சுமார் 5000 ஊழியர்களைப் பணியில் சேர்த்தது. [24]7.ai நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பட்ட மற்றும் தேவைக்கு ஏற்ப வாடிக்கையாளர் சேவைகளையும் அனுபவத்தையும் அளிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

24 * 7 ai company hiring 9000 employees with work from anywhere Option

[24]7 ai company hiring 9000 employees with work from anywhere Option

Story first published: Wednesday, September 21, 2022, 11:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.