தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல பிளானா? டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

அடுத்த மாதம் 24 ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதர்கா ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படுகிறது. 

சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும், சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதில் ஒரு சிலர் ஏற்கனவே ரயில், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

இதற்கான ரிசர்வேசனுக்கு, அரசு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம். இது தவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் மக்கள் முன்பதிவு செய்யலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தீபாவளி முன்னிட்டு அதாவது, அக்டோபர் 21 ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்றும், அதேபோல் அக்டோபர் 22, 23 ஆம் தேதிகளில் பயணம் செய்ய நாளையும், நாளை மறுநாளும் முன்பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளி பண்டிகை கால போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையில் 6 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதனபடி இதில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டது.

அதேபோல் தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையம் – திண்டிவனம், விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டன. தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக இயக்கப்பட்டது.

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணி, வேலூர்,ஆற்காடு,திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக இயக்கப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.